பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 15 மார்ச், 2013

போய் வா நதியலையே இவள் பூச்சூடும்


T K கலா குழந்தைக் குரல் இல்லாமல் பெண் குரலாக அதுவும் முதல் பாடல் டூயட் பாடலாக திரு K J யேஸுதாஸுடன் இணைந்து பாடிய பாடல். இனிமையான இளமை குரல்கள். காதுக்கினிய பாடலாக புரட்சித் தலைவரின் படத்திலிருந்து.

திரைப் படம்: பல்லாண்டு வாழ்க (1975)
இசை: K V மகாதேவன்
நடிப்பு: எம் ஜி ஆர், லதா
இயக்கம்: K சங்கர்
பாடல்: நா காமராசன்



http://asoktamil.opendrive.com/files/Nl84NjY5NjgxX2ZzS2FNXzQ1ODc/Poi%20vaa%20nathi%20alaye.mp3





போய் வா நதியலையே 
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா

வா வா நதியலையே
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா

போய் வா நதியலையே
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா

வா வா நதியலையே
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா

கனி தூங்கும் தோட்டம் முகம் போட்ட கோலம்
பனி வாடை காலம் உனை காண வேண்டும்

நிலவென்னும் ஓடம் கரை சேரும் நேரம்
மழை கூந்தல் ஓரம் இளைப்பாற வேண்டும்

இது போதும் என்று தடுமாறி

இடம்மாறி மாறி சுகம் தேடி


இது போதும் என்று தடுமாறி

இடம்மாறி மாறி சுகம் தேடி


ஆ
உறவாடும் போது சரிபாதி ஆகி

உயிர் காணும் இன்பம் பல கோடி

போய் வா நதியலையே
இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா
பூச்சூடும் நாள் பார்த்து வா


வா வா நதியலையே
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா

பூமிக்கு நீர் கொண்டு வா



நுரை பூவை அள்ளி அலைசிந்த வேண்டும்
அலை மீது கொஞ்சம் தலை சாய வேண்டும்

வசந்தத்தை வென்று வரும் உன்னை கண்டு
மழை வில்லில் வண்ணம் வரைகின்ற வானம்

மெதுவாக வந்து இதழ் மோதி

பதமாக அன்பு நதியோடி


மெதுவாக வந்து இதழ் மோதி

பதமாக அன்பு நதியோடி


ஆ
மண மேடை கண்டு புது மாலை சூடி

குல மங்கை வாழ நலம் பாடி

வா வா நதியலையே
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
பூச்சூடும் நாள் பார்த்து வா
பூமிக்கு நீர் கொண்டு வா
பூச்சூடும் நாள் பார்த்து வா

புதன், 13 மார்ச், 2013

மெல்ல வரும் காற்று

தமிழ் திரைப் படத் துறையை மெல்லிசை மன்னர் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் அவரது இசையில் ஒரு மெல்லிய பாடல். அதிலும் சுசீலா அம்மாவின் குரல் அபாரம். இன்றே வா என்பதிலும், இன்றே தா என்பதிலும் அவர் ஒரு vibration உடன் முடிப்பார். அவரது பல பாடல்களில் இதை பார்த்திருக்கிறேன். மீண்டும் அந்த பாடலை அவரால் மட்டுமே பாடமுடியும் என்ற ஒரு நிலை அதில் தெரியும்.

திரைப் படம்: கலாட்டா கல்யாணம் (1968)
பாடியவர்கள்: T M S, P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: C V ராஜேந்திரன்
நடிப்பு: சிவாஜி, ஜெயலலிதா

http://asoktamil.opendrive.com/files/Nl84NTUwMjgzX0dHMnV0XzgxNjY/mella%20varum%20katru.mp3










மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து

மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து

ஆணிப்பொன் மேனியை
ஆசையில் அணைத்திட
காணிக்கை கொடுத்ததும்
நேற்றல்லவோ
பனிமலர் அழகினில்
மயங்கிட அருகினில்
வந்தால் இன்றே வா

மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண் என்ற மொழி பார்த்து
பெண் என்ற சுதி சேர்த்து

தலைவன் தலைவி
விழியால் மொழிந்தால் பாடல்
தனியே பிரிந்தே
தழுவாதிருந்தால் ஊடல்
அவனும் அவளும்
சிலையாய் இருந்தால் கோயில்
இதயம் முழுதும் அன்பாய் இருந்தால் காதல்

காதலன் பேசிட மாதுளம் பூவினில்
தேன் துளி கொடுத்ததும்
நீயல்லவோ
உனக்குள்ள மயக்கத்தில்
எனக்குள்ள பாக்கியைத்
தந்தால் இன்றே தா

மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து

மலர்ந்தாள் கனிந்தாள்
மடி மேல் விழுந்தாள் பாவை
மெதுவாய் படரும்
கொடி போல் வளைந்தாள் தோகை
யாருமில்லாதொரு நேரத்திலே
உன்னை வாவென அழைத்ததும்
நானல்லவோ
நாளென்ன பொழுதென்ன
ஆரம்பப் பாடத்தை
சொன்னால் இன்றே சொல்



மெல்ல வரும் காற்று
சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து
பெண்ணென்ற சுதி சேர்த்து
ல ல ல ல லாஅ ல லலல லலலா

திங்கள், 11 மார்ச், 2013

பாலாற்றில் சேலாடுது இரண்டு வேலாடுது


கணீர் குரலோன் சீர்காழி கோவிந்தராஜன், புரட்சித் தலைவருக்காக ஜமுனா ராணியுடன் இணைந்து இந்தப் பாடலை பாடியிருக்கிறார். கணமான பாடல் வரிகளுடன் அர்த்தமுள்ள பாடல். இவரையன்றி வேறு யாரும் இவ்வளவு கச்சிதமாகப் பாடியிருக்க முடியாது.

திரைப் படம்: கொடுத்து வைத்தவள் (1963)
இசை: K V மகாதேவன்
இயக்கம்: P நீலகண்டன்
நடிப்பு: எம் ஜி ஆர், E V சரோஜா



http://asoktamil.opendrive.com/files/Nl81NzE1NDkzX04zblBPXzM2MWM/paalatril%20sel%20aaduthu%20irandu.mp3





பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
மேனி பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது

தேனாற்றில் நீராடுது
அழ‌கு தேரோடுது
மனது போராடுது
காதல் தேனாற்றில் நீராடுது
அழ‌கு தேரோடுது
மனது போராடுது

ஆறேழு வயதினிலே
அம்புலியாய் பார்த்த நிலா
ஆறேழு வயதினிலே
அம்புலியாய் பார்த்த நிலா
ஈரேழு வயதில் மாறுது
அது ஏதேதோ க‌தைகள் கூறுது

எண்ணிர‌ண்டு வ‌ய‌தினிலே
க‌ண்ணிர‌ண்டு மாறுப‌ட்டு
எண்ணிர‌ண்டு வ‌ய‌தினிலே
க‌ண்ணிர‌ண்டு மாறுப‌ட்டு
பெண்ம‌ன‌து ஊஞ்ச‌லாடுது
அத‌ன் பேச்சும் மூச்சும் வேகமாகுது

பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
தேனாற்றில் நீராடுது
அழ‌கு தேரோடுது
மனது போராடுது

கோடைக்கால‌ மாலையிலே
குளிர்ந்த‌ ம‌ல‌ர்ச் சோலையிலே
கோடைக்கால‌ மாலையிலே
குளிர்ந்த‌ ம‌ல‌ர்ச் சோலையிலே
வாடைத் தென்றல் இரண்டும் வ‌ந்த‌து
உன் ஆடை தொட்டு ஆடுகின்ற‌து
ஆடை தொட்ட‌ தென்ற‌லுக்கா
அத்தை ம‌க‌ள் சொந்த‌மென்று
ஆடை தொட்ட‌ தென்ற‌லுக்கா
அத்தை ம‌க‌ள் சொந்த‌மென்று
காளையுள்ள‌ம் வாடுகின்ற‌து
எண்ண‌ம் க‌ரை க‌ட‌ந்து ஓடுகின்றது

பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
தேனாற்றில் நீராடுது
அழ‌கு தேரோடுது
மனது போராடுது

புதன், 6 மார்ச், 2013

நீராடும் கண்கள் இங்கே/நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்

 நீராடும் கண்கள் எங்கே என்ற இந்தப் பாடல் இநதப் படத்தில் இடம் பெறவில்லை. முதலில் இந்தப் பாடலுக்கு பதிலாக நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் எங்கிற பாடல் பதிவு செய்யப் பட்டது. பாடலின் வரிகளை பார்த்தால் இரண்டும் கிட்டத் தட்ட ஒரே விதத்தில் அமைந்திருப்பதை புரிந்துக் கொள்ளலாம்.
 
நீ வாராதிருந்தால்
என்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ


நினைவு தராமல் நீ இருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

ஏனோ இரண்டு பாடல்களுக்கும் இந்தப் படத்தில் இடம் பெற  ராசி  இல்லாமல் போனது. பின்னர் சாந்தி என்கின்ற படத்தில் நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் எங்கிற பாடலை இசை மன்னர்கள் இடம்பெற செய்தார்கள். இரண்டுப் பாடல்களையும் சுசீலா அம்மா வழக்கமான இனிமையுடன் அழகாகப் பாடியிருக்கிறார்கள். இரவில் அமைதி நாடுவோர் கேட்கவேண்டிய பாடல்கள்.
இரண்டு  பாடல்களின் ஒலி  வடிவத்தையும்  இங்கே இணைத்திருக்கிறேன்.


திரைப் படம்: வெண்ணிற ஆடை (1965)
இசை: M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
நடிகை: ஜெயலலிதா, ஸ்ரீகாந்த்
பாடியவர்: P சுசீலா
இயக்கம்: ஸ்ரீதர்




Upload Music Files - Audio Hosting -






நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
என்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ
காதலைத் தேடி நான் அழுதேனோ
காரணத்தோடே நான் சிரித்தேனோ
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
நீ வந்த போது நிம்மதி ஏது
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெச்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
என்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ
இனமறியாமல் நானிருந்தேனே
மனமொன்று தந்து மயங்க வைத்தாயே
கனவுகளெல்லாம் நீ வளர்த்தாயே
கையில் வராமல் பறித்து விட்டாயே
பறித்து விட்டாயே
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
என்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே


 திரைப் படம்: சாந்தி (1966)
பாடியவர்: P சுசீலா
பாடல்: கண்ணதாசன்
இசை:  M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: சிவாஜி, தேவிகா


Share Music - Audio Hosting -







நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீ இருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்

நூலிடை மீதொரு மேகலையாட
மாலைக்கனிகள் ஆசையில் வாட
ஏலப்பூங்குழல் இன்னிசை பாட
எண்ணம் யாவும் எங்கோ ஓட
காலையில் உறங்கி மாலையில் எழுந்தால்
கண்கள் இரண்டில் நிம்மதி ஏது
நிம்மதி ஏது நிம்மதி ஏது

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீ இருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்


ல ல ல ல ல

லல லல லல லல

காவிரி ஆறென நீர் விளையாட
கன்னி மலர்கள் தேன் மழையாக
காவிரி ஆறென நீர் விளையாட
கன்னி மலர்கள் தேன் மழையாக
பாதி விழிகள் காதலில் மூட
பாலில் விழுந்த பழம்  போலாட
நீ தர வேண்டும் நான் பெற வேண்டும்
நிலவினில் ஆடும் நிம்மதி வேண்டும்
நிம்மதி வேண்டும் நிம்மதி வேண்டும்

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீ இருந்தால்
கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்


திங்கள், 4 மார்ச், 2013

பாலாபிஷேகம் செய்யவோ உனக்கு தேனாபிஷேகம்

ஜெயச்சந்திரன் தமிழுக்கு வந்த புதிதில் கொஞ்சம் தட்டுத் தடுமாறி தமிழிலில் பாடிய பாடல். அதன் பின்பு பல பாடல்களில் வெளுத்துக் கட்டிவிட்டார். இனிமையானப் பாடல்.

திரைப்படம்: முத்தான முத்தல்லவோ (1976)
இயக்கம்: R விட்டல்
நடிப்பு: முத்துராமன், சுஜாதா
இசை: M S விஸ்வனாதன்
பாடியவர்கள்: P. ஜெயச்சந்திரன், P.சுசீலா

பாடல்: வாலி 

http://asoktamil.opendrive.com/files/Nl81NzA2NDYyX3JVYmpxX2NmODY/paalabishegam%20seiyavo.mp3













ஆஹாஹா ஹா  ஆஹாஹா ஹாஹாஹா

பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ
பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ
அலங்கார வல்லி திரு நாமம் சொல்லி
மலர் கொண்டு பூஜை செய்யவோ
அலங்கார வல்லி திரு நாமம் சொல்லி
மலர் கொண்டு பூஜை செய்யவோ

பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ

மந்திரப் பூஜைகள் மாலையில் தான்
வண்ண மலரணை போடும் வேளையில் தான்
மந்திரப் பூஜைகள்  மாலையில் தான்
வண்ண மலரணை போடும் வேளையில் தான்
மன்மதன் சன்னிதி வழக்கமிது
குல மங்கையர் சங்கம பழக்கமிது
மன்மதன் சன்னிதி வழக்கமிது
குல மங்கையர் சங்கம பழக்கமிஸ்

புன்னகை என்பது பனி வைரம்
அது பொன் மகள் சூடும் மணி மகுடம்
புன்னகை என்பது பனி வைரம்
அது பொன் மகள் சூடும் மணி மகுடம்
கண்டவர் கண் படும் பேரழகு
இது கால் கொண்டு நடக்கின்ற தேரழகு
கண்டவர் கண் படும் பேரழகு
இது கால் கொண்டு நடக்கின்ற தேரழகு

பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ
நலம் பாடும் கண்ணன்
நான் கொண்ட மன்னன்
வலம் வந்து பூஜை செய்யவோ
பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ

சாகச நாடகம் நானறிவேன்
இன்ப சாரசக் கலைகள் நீ அறிவாய் 
சாகச நாடகம் நானறிவேன்
இன்ப சாரசக் கலைகள் நீ  அறிவாய்
இன்னமும் என்னிடம் ரகசியமா
இந்த அச்சமும் நாணமும் அவசியமா

உன்னிடம் சொன்னது ஓரளவு
நெஞ்சில் உள்ளது ஆசை  நூறளவு
உன்னிடம் சொன்னது ஓரளவு
நெஞ்சில் உள்ளது ஆசை  நூறளவு
மெல்லிடை என்பது நூலளவு
அதை மென்மலர்க் கை கொண்டு நீ தழுவு

பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ

நலம் பாடும் கண்ணன்
நான் கொண்ட மன்னன்
வலம் வந்து பூஜை செய்யவோ
பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ