பின்பற்றுபவர்கள்

திங்கள், 16 மே, 2011

பூவிருக்கு வண்டிருக்கு புரிந்துக் கொண்டால் போதும்..

தைரியமிக்க ஒரு காதலி, காதலனை அழைத்து பாடும் பாடல். திருமதி P. சுசீலா அவர்களும்  T M Sஅவர்களும் இனிய காதலை மென்மையாக பாடியிருக்கிறார்கள்.


திரைப் படம்: செந்தாமரை (1962)
இயக்கம்: A பீம் சிங்கு

இசை: M S விஸ்வனாதன் T K ராமமூர்த்தி
நடிப்பு: சிவாஜி, பத்மினி




http://www.divshare.com/download/14835224-cdd


ம் ம் ம் ம் ம் ம் ம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பூவிருக்கு வண்டிருக்கு புரிந்துக் கொண்டால் போதும்..
காவேரி பாய்வது போல் கவிதை வராதோ..
கவிதை வராதோ.. காதல் கதைகள் சொல்லாதோ..
பூவிருக்கு வண்டிருக்கு புரிந்துக் கொண்டால் போதும்..
காவேரி பாய்வது போல் கவிதை வராதோ..

பூவிருக்கும் தோட்டத்துக்கு பொன்னாலே வேலியுந்தான் போட்டிருக்கு..
கேட்டையும்தான் பூட்டியிருக்குது..
அதனால் பயமா..
ஹா..
இது தகுமா..
ம் ம்
சும்மா வருமா..
ம்ம்
மனம் இருந்தாலே மார்க்கம் பிறக்கும் தன்னாலே..
மனம் இருந்தும் குணம் இருந்தும் பணம் இல்லையேல்
காதல் வாழாது மா நிலம் வாழ விடாது..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
கொண்டாடும் அன்பினால் உண்டாகும் காதலை...
துண்டாடும் வல்லமை உண்டோ சொல்லும்..
உலகில் உண்டோ சொல்லும்...
வண்டாடும் கருங்குழலிலே தேன் குளிக்கும் இதழிலே...
கண்டேன் மன உறுதியே...
சிங்காரக் கிளியே எந்தன் சிங்காரக் கிளியே...
சந்தேகம் தீர்ந்ததா சந்தோஷம் சேர்ந்ததா...
செந்தாமரை மனம் தெரிந்ததா...
தெரிந்தது...

சந்தேகம் தீர்ந்தது சந்தோஷம் சேர்ந்தது...
என் தாமரை மனம் தெரிந்தது..
ஹா ஹா ஹா..
பூவிருக்கு வண்டிருக்கு புரிந்துக் கொண்டேன் நானே..
காவேரி பாய்வது போல் கவிதை பாடுவேன்..
கவிதை பாடுவேன் சிலோன் நடனம் ஆடுவேன்..
பூவிருக்கு வண்டிருக்கு பொங்கி வரும் காதல் நீரோடும்..
ஆற்றினிலே நீந்தி ஆடுவோம்...

1 கருத்து:

பனித்துளி சங்கர் சொன்னது…

எப்பொழுதும் ரசிக்க வைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று அருமை பகிர்ந்தமைக்கு நன்றி

கருத்துரையிடுக