பின்பற்றுபவர்கள்

வியாழன், 28 பிப்ரவரி, 2013

உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு

நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை திரு திண்டுக்கல் தனபாலன், திரு கோவை ரவி, திரு தேவதாஸ் ஆகியோருக்கு.

 நல்லதொரு இனிமையான பாடல். டியூன் ஹிந்தியிலிருந்து வந்தாலும், சரியான தமிழ் வார்த்தைகளில் பாடலை எழுதி மெருகூட்டியிருக்கிறார்கள் இசையமைப்பாளரும் கவிஞரும். P. சுசீலா அம்மாவின் குரல் தனி இனிமையோடு இருக்கிறது இந்த பாடலில். 


படம் : இரு வல்லவர்கள்
குரல் : டி.எம்.எஸ்., P சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : S வேதா
நடிகர்கள் : ஜெய்சங்கர், எல்.விஜயலட்சுமி


http://asoktamil.opendrive.com/files/Nl81NzA2OTUxXzNrMERRX2FmN2I/Aasaiya%20Kobama-Iru%20Vallavargal.mp3





உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு
என் பருவத்தின் மீதென்ன படிப்பு
ஆசையா கோபமா ஆசையா கோபமா
ஹோய்
ஆசையா கோபமா ஆசையா  கோபமா
உன் கண்களில் ஏனிந்த நெருப்பு
இரு கன்னத்தில் ஏனிந்த சிவப்பு
ஆசையா கோபமா ஆசையா கோபமா
ஹோய்
ஆசையா கோபமா ஆசையா கோபமா
விழியழகில் சிறு தோரணம்
விளையாடும் பந்தாட்டம் என்ன
விழியழகில் சிறு தோரணம்
விளையாடும் பந்தாட்டம் என்ன
காவல் இல்லாத காட்டு மலர்கள்
காட்டும் கண்ணாடி என்ன
காவல் இல்லாத காட்டு மலர்கள்
காட்டும் கண்ணாடி என்ன
பூந்தோட்டத்தில் ஆடுவதென்ன
அந்தக் கோலத்தை மூடுவதென்ன
ஆசையா கோபமா ஆசையா கோபமா
ஹோய்
ஆசையா கோபமா ஆசையா கோபமா
உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு
என் பருவத்தின் மீதென்ன படிப்பு
ஆசையா கோபமா ஆசையா கோபமா
ஹோய்
ஆசையா கோபமா ஆசையா கோபமா
என் இதழில் இளமேனியில்
இந்தக் கோலம் நீ காணலாமா
என் இதழில் இளமேனியில்
இந்தக் கோலம் நீ காணலாமா
கேட்பார் இல்லாமல் தோட்டம் புகுந்து
ஆட்டம் நீ ஆடலாமா
கேட்பார் இல்லாமல் தோட்டம் புகுந்து
ஆட்டம் நீ ஆடலாமா
மலர் சூடும் முன்னால் என்ன ராகம்
மணமாகும் முன்னால் என்ன தாளம்
ஆசையா கோபமா ஆசையா கோபமா
ஹோய்
ஆசையா கோபமா ஆசையா கோபமா
ஆசையா கோபமா ஆசையா கோபமா
ஆசையா கோபமா ஆசையா கோபமா

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான பாடல்... பல முறை ரசித்ததுண்டு பண்பலையில் (100.5)...

பெயரில்லா சொன்னது…

நன்றி சார்.. இந்த பாடல் மெட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். பாடகர்கள் குரலும் கூடி சேர்ந்து கும்மியடிக்கும் அழகு தனிதான்.

Raashid Ahamed சொன்னது…

ஜெய்சங்கர் நடித்த படங்களில் தான் பல அற்புத கானங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் இது.
“நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன”
“இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது”
“இளமை நாட்டிய சாலை இயற்கை பூமகள் சோலை”
“நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்”
இப்படி நிறைய பாடல்களை உதாரணமாக சொல்லலாம்.

Unknown சொன்னது…

அவர் நடித்த படங்களில் பாடல்கள் அனைத்தும் மிக அருமையான பாடல்கள்.
அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர்
கடிதம்
இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால்
மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
பூவினும் மெல்லிய பூங்கொடி
இது போன்ற பல பாடல்களைக் கூறலாம்
25 ஏப்ரல் 2021 அன்று முற்பகல் 11.35

கருத்துரையிடுக