பின்பற்றுபவர்கள்

திங்கள், 11 மார்ச், 2013

பாலாற்றில் சேலாடுது இரண்டு வேலாடுது


கணீர் குரலோன் சீர்காழி கோவிந்தராஜன், புரட்சித் தலைவருக்காக ஜமுனா ராணியுடன் இணைந்து இந்தப் பாடலை பாடியிருக்கிறார். கணமான பாடல் வரிகளுடன் அர்த்தமுள்ள பாடல். இவரையன்றி வேறு யாரும் இவ்வளவு கச்சிதமாகப் பாடியிருக்க முடியாது.

திரைப் படம்: கொடுத்து வைத்தவள் (1963)
இசை: K V மகாதேவன்
இயக்கம்: P நீலகண்டன்
நடிப்பு: எம் ஜி ஆர், E V சரோஜா



http://asoktamil.opendrive.com/files/Nl81NzE1NDkzX04zblBPXzM2MWM/paalatril%20sel%20aaduthu%20irandu.mp3





பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
மேனி பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது

தேனாற்றில் நீராடுது
அழ‌கு தேரோடுது
மனது போராடுது
காதல் தேனாற்றில் நீராடுது
அழ‌கு தேரோடுது
மனது போராடுது

ஆறேழு வயதினிலே
அம்புலியாய் பார்த்த நிலா
ஆறேழு வயதினிலே
அம்புலியாய் பார்த்த நிலா
ஈரேழு வயதில் மாறுது
அது ஏதேதோ க‌தைகள் கூறுது

எண்ணிர‌ண்டு வ‌ய‌தினிலே
க‌ண்ணிர‌ண்டு மாறுப‌ட்டு
எண்ணிர‌ண்டு வ‌ய‌தினிலே
க‌ண்ணிர‌ண்டு மாறுப‌ட்டு
பெண்ம‌ன‌து ஊஞ்ச‌லாடுது
அத‌ன் பேச்சும் மூச்சும் வேகமாகுது

பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
தேனாற்றில் நீராடுது
அழ‌கு தேரோடுது
மனது போராடுது

கோடைக்கால‌ மாலையிலே
குளிர்ந்த‌ ம‌ல‌ர்ச் சோலையிலே
கோடைக்கால‌ மாலையிலே
குளிர்ந்த‌ ம‌ல‌ர்ச் சோலையிலே
வாடைத் தென்றல் இரண்டும் வ‌ந்த‌து
உன் ஆடை தொட்டு ஆடுகின்ற‌து
ஆடை தொட்ட‌ தென்ற‌லுக்கா
அத்தை ம‌க‌ள் சொந்த‌மென்று
ஆடை தொட்ட‌ தென்ற‌லுக்கா
அத்தை ம‌க‌ள் சொந்த‌மென்று
காளையுள்ள‌ம் வாடுகின்ற‌து
எண்ண‌ம் க‌ரை க‌ட‌ந்து ஓடுகின்றது

பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
தேனாற்றில் நீராடுது
அழ‌கு தேரோடுது
மனது போராடுது

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கண்டிப்பாக, சீர்காழி அவர்களைத்தவிர யாரும் பாட முடியாது...

கே. பி. ஜனா... சொன்னது…

அப்படியே மனதை அள்ளிக்கொண்டு போகும் இசை!

Raashid Ahamed சொன்னது…

வெண்கலக்குரலோன் என பெயர் பெற்றவர் இசைமேதை டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள். இவர் குரலில் உள்ள கம்பீரம் யாருடனும் ஒப்பிட முடியாது

கருத்துரையிடுக