பின்பற்றுபவர்கள்

சனி, 2 மார்ச், 2013

சரியென்று நீயே ஒரு வார்த்தை சொன்னால்

இது அந்தக் காலத்து ஈவ் டீஸிங்க்  போலிருக்கு. இளமையான இன் குரலில் காதலை கெஞ்சும் பாடல். பெண் உறுதியாக நிற்கிறார்.

திரைப் படம்: முல்லைவணம் (1955)
இயக்கம்: V கிருஷ்ணன்
நடிப்பு: ஸ்ரீராம், குமாரி ருக்மணி
குரல்கள்: டி  எம் எஸ், சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
மற்றைய விபரங்கள் திரு நாகராஜன் சொல்ல எதிர்பார்க்கிறேன்.


http://asoktamil.opendrive.com/files/Nl83OTY1OTExX2dKbmptXzUzODE/sari%20endru%20neeye.mp3



சரியென்று நீயே ஒரு வார்த்தை சொன்னால்
சந்தோஷமாக வாழலாம்
நாம் என்றென்றும் இன்பம் காணலாம்
அழையாத வீட்டின் விருந்தாளி நீயே
அளவு மீறலாகுமா
வீன் ஆசை கொள்ளலாகுமா
என் வாழ்விலே என் நாளுமே
கண்ணே உன் காதல் மறவேனே நான்
இனித்திடும் பேச்சு பேசியே என்னை
ஏமாற்ற உன்னால் முடியாதே
இனித்திடும் பேச்சு பேசியே என்னை
ஏமாற்ற உன்னால் முடியாதே
அழையாத வீட்டின் விருந்தாளி நீயே
அளவு மீறலாகுமா
வீண் ஆசை கொள்ளலாகுமா
மலர் கொடி பாராய்
ஜோடியை தேடி
மகிழ்ந்தே தென்றலில் அசைந்தாடுதே
மலர் கொடி பாராய்
ஜோடியை தேடி
மகிழ்ந்தே தென்றலில் அசைந்தாடுதே
பகுத்தறிவில்லா மலர் கொடி அல்ல
பைந்தமிழ்நாட்டின் பெண்மணி
பகுத்தறிவில்லா மலர் கொடி அல்ல
பைந்தமிழ்நாட்டு பெண்மணி
அழையாத வீட்டின் விருந்தாளி நீயே
அளவு மீறலாகுமா
வீன் ஆசை கொள்ளலாகுமா
மாளிகை தருவேன் ஏ ஏ
மண் குடிசை போதுமே ஏ ஏ
மணி மாளிகை தருவேன் ஏ ஏ
மண் குடிசை போதுமே ஏ ஏ
ஆண் துணை இல்லாமல் நீ வாழமுடியுமா
ஆண்டவன் எங்குமிருப்பது உனக்கு தெரியுமா
ஆண் துணை இல்லாமல் நீ வாழமுடியுமா
ஆண்டவன் எங்குமிருப்பது உனக்கு தெரியுமா
வீண் பிடிவாதமாகுமா
இது நியாயமா
வெறுத்தாலும் உனை நான் விடுவேனா
வீண் பிடிவாதமாகுமா
இது நியாயமா
வெறுத்தாலும் உனை நான் விடுவேனா
சரியென்று நீயே ஒரு வார்த்தை சொன்னால்
சந்தோஷமாக வாழலாம்
என்றென்றும் இன்பம் காணலாம்

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இன்று தான் இந்தப்பாடலையே கேட்கிறேன்...

வரிகளுக்கு நன்றி சார்...

Raashid Ahamed சொன்னது…

சிறுவயதில் என் பெற்றோர் இலங்கை வானொலியில் இந்த பாடலை ரசித்து கேட்டதாக ஞாபகம். இது அவர்களுக்கு தான் பிடிக்கும் எனவே நானும் ரசிக்கிறேன். அவர்கள் சார்பாக நன்றியும் தெரிவிக்கிறேன்.

NAGARAJAN சொன்னது…

இப்பாடலில் உள்ள பெண் குரல் ராதா ஜெயலக்ஷ்மி. இசை அமைத்தவர் K V மகாதேவன்.

1955ல் K V M க்கு நல்ல பெயரைக் கொடுத்த படங்களில் இப்படமும் ஒன்று.


எங்கிருந்தோ இங்கு வந்த ரதியே என்ற பாடல் இப்படத்தின் மிகவும் பிரபலமான பாடல்.

பாடியவர்கள் TMS மற்றும் ராதா ஜெயலக்ஷ்மி.

பாடல்கள் மருதகாசி என்று ஞாபகம்.

வியாபர ரீதியில், இப்படம் சரியாகப் போகவில்லை.

பெயரில்லா சொன்னது…

நான் பிறக்காத முன் வந்த படம்.. இது போன்ற அறிய பாடல் உங்கள் கிணற்றுதவளைதான் ரீங்காரமிடும்.

கருத்துரையிடுக