பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 22 மார்ச், 2013

புது மஞ்சள் மேனி சிட்டு புடவைக்குள் ஊஞ்சலிட்டு


இது S P பாலுவின் அபூர்வ பாடலாக நினைக்கிறேன். M S விஸ்வனாதன் அவர்கள் தமிழ் திரை உலகில் தன்னந்தனி ஆவர்த்தனம் நடத்திக் கொண்டிருந்த போது வந்த படம். இதை இசையில் உணரலாம். பாடல் வரிகள் அற்புதம். சற்று கனமான தமிழ் வரிகள். பாடல் முழுவதும் எங்கும் தொய்வு ஏற்படாமல்   இசையமைத்துள்ளார்.
V K ராமசாமி தயாரித்த படம். அவ்வளவாக வெற்றி பெறவில்லை என நினைக்கிறேன்.


இத்துடன் எனக்கு தெரிந்து ராதா ரவி தமிழில் (இதே  படம் ) பாடி நடித்திருக்கும் ஒரே பாடலையும் கணக்கில் வராமல் இணைத்திருக்கிறேன். யாராவது இவர் பாடிய வேறு பாடலைப் பற்றி தெரிந்திருந்தால் தெரியப்படுத்துங்கள்.

திரைப் படம்: ருத்ர தாண்டவம் (1978)

பாடியவர்கள்: S P B , வாணி ஜெயராம்
பாடல் : வாலி
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: K விஜயன்
நடிப்பு: V K ராமசாமி, விஜயகுமார், சுமித்ரா

http://asoktamil.opendrive.com/files/Nl85Njk3NjE3X3lLTHhEXzg0MmM/puthu%20mansal-%20Ruthra%20Thandavam.mp3


















ராதா ரவியின் பாடல் :
















புது மஞ்சள் மேனி சிட்டு
புடவைக்குள் ஊஞ்சலிட்டு
நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
புது மஞ்சள் மேனி சிட்டு
புடவைக்குள் ஊஞ்சலிட்டு
நடனங்கள் ஆடிடும் நயமான அழகு

விழியே இது என்ன ராஜாங்கமோ
விழியே இது என்ன ராஜாங்கமோ

இதழ் தொட்டு தென்றல் பூஜை
இடை தொட்டு காமன் பூஜை
உடலெங்கும் உங்கள் பூஜை
இதுதானே உங்கள் ஆசை
மோகம் அழைக்கின்றதே
நாணம் தடுக்கின்றதே
ம் ம் ஹும் ம் நாணம் தடுக்கின்றதே

புது மஞ்சள் மேனி சிட்டு
புடவைக்குள் ஊஞ்சலிட்டு
நடனங்கள் ஆடிடும் நயமான அழகு
விழியே இது என்ன ராஜாங்கமோ

நீர் கொண்ட மேகங்கள் குடை போடவும்
நிலை கொண்ட புஷ்பங்கள் மணம் தூவவும்
தேர் கொண்ட பறவைகள் சுதி மீட்டவும்
திருமேனி வலம் வந்த சுகம் என்னவோ
கார்க்கூந்தல் கடல் கொண்ட அலையாகவும்
கல்யாண பூச்செண்டு அசைந்தாடவும்
தேர் கொண்ட மணிசங்கு ஒலி காட்டவும்
நிழல் கொண்ட ரதிதேவி உரு வந்ததோ
நிழல் கொண்ட ரதிதேவி உரு வந்ததோ
அங்கம் தொடாமல் சங்கம் இல்லாமல்
கண்ணில் சுகங்கள் இல்லை
மன்னன் வராமல் மகராணி என்னும்
பெண்மை நலங்கள் இல்லை

புது மஞ்சள் மேனி சிட்டு
புடவைக்குள் ஊஞ்சலிட்டு
நடனங்கள் ஆடிடும் நயமான அழகு

விழியே இது என்ன ராஜாங்கமோ

தேன் சிந்தும் சிறு கூடு நடமாடுது
சிறு முல்லை மகரந்தப் பொடி தூவுது
பால் வண்ணம் மடி மீது விளையாடுது
மழை ராக தமிழ் வீணை இசை பாடுது
உறவென்றும் சுகமென்றும் நினையாதது
ஒரு நெஞ்சில் நிலையான இடம் தேடுது
இரவென்றும் பகலென்றும் அரியாமலே
இதமான சுகம் காண உனை நாடுது
இதமான சுகம் காண உனை நாடுது
தஞ்சம் புகுந்த மஞ்சள் நிலாவை
என்றும் மறந்ததில்லை
அஞ்சும் நடுங்கும் பிஞ்சாக நின்றும்
ஆசை இழந்ததில்லை

புது மஞ்சள் மேனி சிட்டு
புடவைக்குள் ஊஞ்சலிட்டு
நடனங்கள் ஆடிடும் நயமான அழகு

விழியே இது என்ன ராஜாங்கமோ
விழியே இது என்ன ராஜாங்கமோ




6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அறியாத பாடல் சார்... நன்றி...

NAGARAJAN சொன்னது…

பாடலை எழுதியவர் கண்ணதாசன் என நினைக்கிறேன் .

மரோ சரித்திரா தெலுங்குப் படத்திற்கு இசை அமைத்த MSV , அப்படத்தின் பாடல் ஒன்றின் மெட்டினையே இப்பாடலுக்கும் எடுத்துக் கொண்டுள்ளார்

NAGARAJAN சொன்னது…

பூவே செம்பூவே உன் வாசம் வரும் பாடலில் ராதா ரவி பாடி நடித்திருப்பார் (சொல்லத் துடிக்குது மனசு ) - இளையராஜா இசையில் அருமையான பாடல்

பெயரில்லா சொன்னது…

நன்றி திரு நாகராஜன்

சங்கர் சொன்னது…

சூரக்கோட்டை சிங்ககுட்டி படத்தில்"அப்பன் பேச்சை கேட்டவன் யாரு" பாடல் ராதா ரவி நடித்து SPB
MR ராதா குரலில் பாடிய பாடல்
- சங்கர் நெல்லை

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமை...!

கருத்துரையிடுக