பின்பற்றுபவர்கள்

திங்கள், 25 மார்ச், 2013

வெள்ளைக் கமலத்திலே அவள் வீற்றிருப்பாள்

முன்னதாக எழுதப் பட்ட பாடலுக்கு இசை வடிப்பது கொஞ்சம் சிரமம். சில வெட்டுகள், சில குத்துகள் பெற்று பாடல் உண்மை பொழிவை இழந்துவிடும்.
பாரதியாரின் பாடல்களை பொருத்தவரை, நமது எல்லா இசையமைப்பாளர்களும்  மிக கவனமாக கையாண்டிருக்கிறார்கள். அதற்கு இந்தப் பாடல் ஒரு எடுத்துக் காட்டு. பாடுபவர் தேர்வும் மிகச் சரியாக செய்துள்ளார்.
மனதிற்கு அமைதி தரும் வகையில் இனிமையான பாடல்.
காதொலி பாடலுக்கும் காணொளி பாடலுக்கும் சில வரிகளில் மாற்றம் தெரிகிறது.

திரைப் படம்: கெளரி கல்யாணம்  (1966)
குரல்கள்:சூலமங்கலம் இராஜலஷ்மி 
இசை: M S விஸ்வனாதன் 
பாடல்: மகாகவி சுப்ரமணிய பாரதியார்
இயக்கம்: K சங்கர்
நடிப்பு: ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன், ஜெயலலிதா.

http://asoktamil.opendrive.com/files/Nl85OTYwMzcwX2kzR2NiXzdiNjU/vellai%20kamalathile.mp3





 


வெள்ளைக் கமலத்திலே 
அவள் வீற்றிருப்பாள் 
புகழ் ஏற்றிருப்பாள் 
வெள்ளைக் கமலத்திலே 
அவள் வீற்றிருப்பாள் 
புகழ் ஏற்றிருப்பாள் 

கொள்ளை கனி இசைதான் நன்கு கொட்டு நல் 
யாழினைக் கொண்டிருப்பாள் 
கொள்ளை கனி இசைதான் நன்கு கொட்டு நல் 
யாழினைக் கொண்டிருப்பாள் 
வெள்ளைக் கமலத்திலே 
வெள்ளைக் கமலத்திலே

சொற்படு நயம் அறிவார் இசை தோய்ந்திட தொகுப்பதில் சுவை அறிவார் சொற்படு நயம் அறிவார் இசை தோய்ந்திட தொகுப்பதில் சுவை அறிவார் விற்பல தமிழ்ப் புலவோர் அந்த மேலவர் நாவெனும் மலர் பதத்தாள் விற்பல தமிழ்ப் புலவோர் அந்த மேலவர் நாவெனும் மலர் பதத்தா வெள்ளைக் கமலத்திலே
வெள்ளைக் கமலத்திலே

கள்ளை கடலமுதை - நிகர்
கண்டதோர் பூந்தமிழ்க் கவி சொல்லவே
     
கள்ளை கடலமுதை - நிகர்
கண்டதோர் பூந்தமிழ்க் கவி சொல்லவே
பிள்ளை பருவத்திலே -என்னைப்
பேண வந்தாளருல் பூண வந்தாள்
பிள்ளை பருவத்திலே -என்னைப்
பேண வந்தாளருல் பூண வந்தாள்

வெள்ளைக் கமலத்திலே 
வெள்ளைக் கமலத்திலே 

வாணியைச் சரண் புகுந்தேன் 
அருள் வாக்களிப்பாள் என இடம் மிகுந்தேன் 
வாணியைச் சரண் புகுந்தேன் 
அருள் வாக்களிப்பாள் என இடம் மிகுந்தேன் 
வேண்டிய பெரும் தவத்தாள் 
நிலம் பெயரளவும் 
பெயர் பெயராதாள் 
வேண்டிய பெரும் தவத்தாள் 
நிலம் பெயரளவும் 
பெயர் பெயராதாள் 
வெள்ளைக் கமலத்திலே 
அவள் வீற்றிருப்பாள் 
புகழ் ஏற்றிருப்பாள் 
கொள்ளை கனி இசைதான் நன்கு கொட்டு நல் 
யாழினைக் கொண்டிருப்பாள் 
வெள்ளைக் கமலத்திலே 
வெள்ளைக் கமலத்திலே




3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான பாடல் சார்... நன்றி...

நீங்கள் குறிப்பிட்டதும் உண்மை...

Raashid Ahamed சொன்னது…

இந்த அருமையான பாடலை இயற்றியவரை என்ன இப்படி சாதாரணமாக குறிப்பிட்டு விட்டீர்கள் ? “ மகாகவி சுப்பிரமணிய பாரதியார்” என குறிப்பிடுவதல்லவா சரியானது.

Unknown சொன்னது…

ராஷீத் ஸார், நான் செய்தது தவறுதான் இதோ திருத்திக் கொண்டேன்

கருத்துரையிடுக