பின்பற்றுபவர்கள்

திங்கள், 4 மார்ச், 2013

பாலாபிஷேகம் செய்யவோ உனக்கு தேனாபிஷேகம்

ஜெயச்சந்திரன் தமிழுக்கு வந்த புதிதில் கொஞ்சம் தட்டுத் தடுமாறி தமிழிலில் பாடிய பாடல். அதன் பின்பு பல பாடல்களில் வெளுத்துக் கட்டிவிட்டார். இனிமையானப் பாடல்.

திரைப்படம்: முத்தான முத்தல்லவோ (1976)
இயக்கம்: R விட்டல்
நடிப்பு: முத்துராமன், சுஜாதா
இசை: M S விஸ்வனாதன்
பாடியவர்கள்: P. ஜெயச்சந்திரன், P.சுசீலா

பாடல்: வாலி 

http://asoktamil.opendrive.com/files/Nl81NzA2NDYyX3JVYmpxX2NmODY/paalabishegam%20seiyavo.mp3













ஆஹாஹா ஹா  ஆஹாஹா ஹாஹாஹா

பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ
பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ
அலங்கார வல்லி திரு நாமம் சொல்லி
மலர் கொண்டு பூஜை செய்யவோ
அலங்கார வல்லி திரு நாமம் சொல்லி
மலர் கொண்டு பூஜை செய்யவோ

பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ

மந்திரப் பூஜைகள் மாலையில் தான்
வண்ண மலரணை போடும் வேளையில் தான்
மந்திரப் பூஜைகள்  மாலையில் தான்
வண்ண மலரணை போடும் வேளையில் தான்
மன்மதன் சன்னிதி வழக்கமிது
குல மங்கையர் சங்கம பழக்கமிது
மன்மதன் சன்னிதி வழக்கமிது
குல மங்கையர் சங்கம பழக்கமிஸ்

புன்னகை என்பது பனி வைரம்
அது பொன் மகள் சூடும் மணி மகுடம்
புன்னகை என்பது பனி வைரம்
அது பொன் மகள் சூடும் மணி மகுடம்
கண்டவர் கண் படும் பேரழகு
இது கால் கொண்டு நடக்கின்ற தேரழகு
கண்டவர் கண் படும் பேரழகு
இது கால் கொண்டு நடக்கின்ற தேரழகு

பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ
நலம் பாடும் கண்ணன்
நான் கொண்ட மன்னன்
வலம் வந்து பூஜை செய்யவோ
பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ

சாகச நாடகம் நானறிவேன்
இன்ப சாரசக் கலைகள் நீ அறிவாய் 
சாகச நாடகம் நானறிவேன்
இன்ப சாரசக் கலைகள் நீ  அறிவாய்
இன்னமும் என்னிடம் ரகசியமா
இந்த அச்சமும் நாணமும் அவசியமா

உன்னிடம் சொன்னது ஓரளவு
நெஞ்சில் உள்ளது ஆசை  நூறளவு
உன்னிடம் சொன்னது ஓரளவு
நெஞ்சில் உள்ளது ஆசை  நூறளவு
மெல்லிடை என்பது நூலளவு
அதை மென்மலர்க் கை கொண்டு நீ தழுவு

பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ

நலம் பாடும் கண்ணன்
நான் கொண்ட மன்னன்
வலம் வந்து பூஜை செய்யவோ
பாலாபிஷேகம் செய்யவோ
உனக்கு தேனாபிஷேகம் செய்யவோ

3 கருத்துகள்:

NAGARAJAN சொன்னது…

P ஜெயச்சந்திரன் தமிழில் பாடிய முதல் பாட்டு - தங்கச் சிமிழ் போல் இதழோ - மணிப்பயல் என்ற படத்தில். வெளியான ஆண்டு 1973. பாடல் பிரபலமானது

1974ல், நான் அவன் இல்லை என்ற படத்தில் பாடிய மந்தார மலரே என்ற பாடல் (உடன் பாடியவர் LR ஈஸ்வரி - இசை MS விஸ்வநாதன்) மிகப் பிரபலமானது.

தமிழில், MS விஸ்வநாதன் இசையில் மட்டும் அதிகப் பாடல்களைப் பாடியுள்ளார்

Unknown சொன்னது…

விபரங்களுக்கு நன்றி திரு நாகராஜன்.

Raashid Ahamed சொன்னது…

ஒரு வித்யாசமான குரலைக் கொண்டவர் ஜெயச்சந்திரன். இவர் பாடியதில் நிறைய இனிய பாடல்களும் சில பாடல்கள் சூப்பர் ஹிட்டாகவும் அமைந்திருக்கின்றன. “சித்திரச்செவ்வானம் சிரிக்கக்கண்டேன்” “கவிதை அரங்கேறும் நேரம் மலர்கணைகள்”
“ராஜாப்பொண்ணு அடி வாடியம்மா” “கீதா சங்கீதா சங்கீதமே”
“மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்”
“செவ்வானமே பொன்மேகமே”
”காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்”
இது போல பாடல்கள் சொல்லலாம்

கருத்துரையிடுக