From vikatan
‘ஆச்சி’ மனோரமா:
”நாகேஷோடு நான் சேர்ந்து நடிச்ச முதல் படம் ‘நாகமலை அழகி’. அப்ப நாகேஷ், ரொம்ப ஒடிசலா இருப்பார். என் கையைப் புடிச்சுக்கிட்டு நாகேஷ் நடிக்கிற காட்சிகளின்போது எங்கம்மாவுக்குப் பயங்கரமா கோபம் வரும். ‘அவரைச் சாதாரணமா நினைக்காதீங்க. திறமைசாலி… நிச்சயம் பெரிய ஆளா வருவார்’னு நான் என் அம்மாவைச் சமாதானப்படுத்துவேன். ஆரம்ப நாட்களில் டான்ஸ் காட்சிகள் என்றாலே நாகேஷூக்கு அலர்ஜி. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் டைரக்ஷன்ல ‘தெய்வத்தின் தெய்வம்’ படப்பிடிப்பு சமயம், நாகேஷ் நடனக் காட்சிகளில் நிறைய டேக்குகள் வாங்கினார். ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆயிட்ட டைரக்டர், அந்தப் பாட்டையே படத்திலிருந்து தூக்கிட்டார். அந்த சம்பவம் நாகேஷ் மனசுல ஆறாத காயத்தை உண்டாக்கிடுச்சு. அனா, அதையே வைராக்கியமா எடுத்துக்கிட்டு, சுந்தரம் மாஸ்டர்கிட்ட சில மாதங்கள் இரவும் பகலும் நடனத்தைக் கத்துக்கிட்டார். அப்புறம் சினிமாவில் ‘நாகேஷ் டான்ஸ்’னு ஒரு புது வகை நடனம் உருவாகிற அளவுக்கு டான்ஸ்ல பிரமாதப்படுத்த ஆரம்பிச்சுட்டார்.
பாலசந்தர் சாரின் ‘நவக்கிரகம்’ படத்தில் நடிக்கும்போது நாகேஷோடு எனக்கு மனஸ்தாபம் ஆயிருச்சு. அதைச் சரிசெய்து, எங்களை நடிக்கவைக்க பாலசந்தர் சார் ரொம்ப முயற்சி பண்ணினார். ஆனா, அவரால முடியலை. அதுக்கப்புறம் முப்பது வருஷத்துக்கும் மேல நான் நாகேஷோடு சேர்ந்து நடிக்கலை. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு விழாவுல நான், நாகேஷ், பாலசந்தர் சார் மூணு பேரும் கலந்துக்கிட்டோம். அப்போ பாலசந்தர் சார், எங்க ரெண்டு பேரையும் மேடைக்குக் கூப்பிட்டு, பக்கத்து பக்கத்துல நிக்க வெச்சுக்கிட்டு, ‘இவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா சேர்த்துப் பார்க்க, எனக்கு 30 வருஷத்துக்கு மேலாயிடுச்சு’னு சிரிச்சுக்கிட்டே சொன்னார். ‘ஹாலிவுட் நடிகர் ஜெரி லூயிஸ்தான் என் குருநாதர்’னு அடிக்கடி என்கிட்டே சொல்வார் நாகேஷ். நான் ஒரு சமயம் அவர்கிட்ட, ‘ஆனா நீங்க நடிச்ச ‘வைத்தி’, ‘தருமி’ கேரக்டர்களை லூயிஸை நடிக்கச் சொன்னா, அவரால நிச்சயமா முடியாது’ன்னு சொன்னேன். என்னை ஆச்சர்யமா பார்த்தார்.
ஒரு நிமிஷம்கூட சும்மாவே இருக்காம, எப்பவுமே துறுதுறுன்னு சுறுசுறுப்பா இருப்பார். அப்படிப்பட்டவர் இப்போ சலனமே இல்லாம கண்ணாடிப் பெட்டிக் குள்ள படுத்திருக்கிறதைப் பார்க்குறப்போ, ‘சாவே உனக்கொரு நாள் சாவு வந்து சேராதோ’ன்னு கண்ணதாசன் பாட்டுதான் ஞாபத்துக்கு வருது!” கண்ணீரோடு முடிக்கிறார் ஆச்சி.
nanri: http://awardakodukkaranga.wordpress.com/படம்: நாகமலை அழகி
பாடகர்கள்: எ.ல். ராகவன், ஜமுனாராணி
மேற்கொண்டு இந்த படத்தினைப் பற்றிய விபரங்கள் ஏதும் எனக்கு கிடைக்கவில்லை.
http://asoktamil.opendrive.com/files/Nl8xNDYwNTk5OF9yelFnb18yYmQ1/Vandu%20Vanthu%20Mella.mp3
வண்டு வந்து மெல்ல மெல்ல
வண்டு வந்து மெல்ல மெல்ல
கண்ணுக்குள்ளே செல்ல செல்ல
ஏனோ இங்கு வந்த அழகன்
எந்தன் உள்ளமதை கொண்டு செல்ல
எந்தன் உள்ளமதை கொண்டு செல்ல
பிள்ளை மொழி சொல்ல சொல்ல
வெல்லும் விழி கொல்ல கொல்ல
ஏனோ இங்கு வந்த அழகி
எந்தன் உள்ளமதை கொண்டு செல்ல
எந்தன் உள்ளமதை கொண்டு செல்ல
மலரோடு மனம் போல நாமே
இந்த உடலோடு உறவாடும் நிலவே
மலரோடு மனம் போல நாமே
இந்த உடலோடு உறவாடும் நிலவே
என் நெஞ்சோடு நீயாடும் சுவையே
நெஞ்சோடு நீயாடும் சுவையே
இனி நீயின்றி என் வாழ்வும் இல்லையே
எந்தன் உள்ளமதை கொண்டு செல்ல
எந்தன் உள்ளமதை கொண்டு செல்ல
பேசாமல் பேசும் உன் விழியே
தேடாமல் தேடும் என் உயிரே
பேசாமல் பேசும் உன் விழியே
தேடாமல் தேடும் என் உயிரே
காணமல் காணும் என் எழிலே
காணமல் காணும் என் எழிலே
இனி நீயின்றி என் வாழ்வும் இல்லையே
எந்தன் உள்ளமதை கொண்டு செல்ல
எந்தன் உள்ளமதை கொண்டு செல்ல
வண்டு வந்து மெல்ல மெல்ல
கண்ணுக்குள்ளே செல்ல செல்ல
ஏனோ இங்கு வந்த அழகி
எந்தன் உள்ளமதை கொண்டு செல்ல
எந்தன் உள்ளமதை கொண்டு செல்ல
1 கருத்து:
சிலர் மனதை விட்டு மறைவது இல்லை...
கருத்துரையிடுக