பின்பற்றுபவர்கள்

புதன், 3 ஜூலை, 2013

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ

படு தோல்வி அடைந்த AVMஇன் படம். ஆனால் பாடல்கள் அனைத்தும் அருமை. அண்ணாதுரையின் கதை வசனத்தில் நாடகமாக வெற்றியடைந்த இந்தக் கதை திரைப்படமாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை.

சுத்த தமிழ் பாடல். இன்றைக்கு பலருக்கு யாழும் தெரியாது, இந்தத் தமிழும் புரியாது.

திரைப்படம்: ஓர் இரவு (1951)
பாடியோர்: எம்.எஸ். ராஜேஸ்வரி, வி.ஜே. வர்மா
இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்
இயக்கம்: P நீலகண்டன்
திரைக் கதை: C N அண்ணாதுரை
நடிப்பு : K R ராமசாமி, A நாகேஸ்வர ராவ், லலிதா, T P முத்துலட்சுமி
இசை: R சுதர்சனம்


http://asoktamil.opendrive.com/files/Nl8xMDczMzE5MV9Mdmxhdl80YmI5/THUNBAM-ms.rajeeswari%20-%20vs.varma-OR%20IRAVU-barathidasan.mp3





திரு நாகராஜன்   உதவியுடன் இந்த காணொளி  எம் எம் தண்டபாணி தேசிகரின் பாடல்.




துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா
எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா

எப்படி எப்படி மாட்டாயா
ஓஹோ
எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா
ஓஹோ
எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா
அப்புறம்

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா
கண்ணே அல்லல்

ஆஹாஹா
அந்த இடந்தான் அற்புதம்
கண்ணே கண்ணே
சரி தானா கண்ணே

கண்ணே கண்ணேன்னு என் முகத்தை ஏன்

இது இல்லை பாடு
கண்ணே சரிதானான்னு கேட்டேன்

பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
பண்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க நீ
அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா

அறமிகுந்தும் யாம் மறமிகுந்துமே
அருகிலாத போதும்
யாம் அருகிலாத போதும்
தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்
இயம்பிக் காட்ட மாட்டாயா
நீ இயம்பிக் காட்ட மாட்டாயா
நீ
அன்று நற்றமிழ் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா
கண்ணே ஆடிக் காட்ட மாட்டாயா



10 கருத்துகள்:

Raashid Ahamed சொன்னது…

வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத ஒரு அற்புத பாடல் இது. 60 வருடம் கழித்து இந்த பாடலை இப்போதும் ரசிக்கிறார்கள் யூடியூபில் வீடியோவாக கிடைக்கிறது என்றால் இதன் மதிப்பை எப்படி சொல்வது. எம்எஸ்ராஜேஸ்வரி அம்மாவின் அழகு குரலில் அமைந்த எல்லா பாடல்களையும் ரசிக்கலாம். நீங்கள் சொன்னபடி இந்த மாதிரி தமிழ் பாடல்களுக்கு தனியாக அருஞ்சொற்பொருளும் குறிப்பிட வேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

என்னவொரு இனிமையான பாடல்... நன்றி சார்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இன்றைய பதிவில் சில பாடல் வரிகளுக்கு சந்தேகம் வந்த போது உங்கள் தளத்தில் தான் தேடி கண்டு பிடித்தேன்... மிக்க மிக்க நன்றி சார்...

தங்களின் பார்வைக்கு :

http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Moon-Blossom.html

Unknown சொன்னது…

நன்றி, திண்டுக்கல் தனபாலன் ஸார். இதில் என் பங்கு மிகச் சிறிதுதான். நன்றி.... தமிழ் கூறும் நல்லுலகத்துக்கே.

Unknown சொன்னது…

ராஷித் ஸார், இதில் வேடிக்கை என்னவென்றால், அன்றைய தமிழுக்கும் அருஞ்சொற்பொருள் வேண்டியதாக இருக்கிறது. இது நமது அறியாமையை காட்டும். இன்றைய தங்க்லிஷுக்கும் அருஞ்சொல்பொருள் தேவையாகின்றது. இது நமது அடிமை புத்தியை காட்டுகிறதோ?

NAGARAJAN சொன்னது…

நல்ல பாடல்.


இப்பாடலுக்கு இசை அமைத்து முதலில் பாடியவர் M M தண்டபாணி தேசிகர்.

இவர் அமைத்த மெட்டையே R சுதர்சனம் ஓர் இரவு படத்தில் பயன் படுத்திக் கொண்டார்.


என்னிடம் M M D S இசையமைத்த இப்பாடல் அவரின் விளக்கமுடன் உள்ளது. தேடி எடுத்து

இணைப்பைத் தருகிறேன்.

Unknown சொன்னது…

விபரங்களுக்கு நன்றி நாகராஜன் ஸார். தேசிகரின் பாடலை எதிர்ப்பார்க்கிறேன்.

கே. பி. ஜனா... சொன்னது…

மிகப் பிடித்த பாடல். நான் மீண்டும் மீண்டும் கேட்டு ரசிக்கிற மிக இனிமையான பாடல். இசை அமைத்தவர் M.M.தண்டபாணி தேசிகர் (அவரின் 'தாமரை பூத்த தடாகமடா... அருமையான பாடல்.) என்றறிந்துகொண்டேன்...(நன்றி: திரு.நாகராஜன்.)

NAGARAJAN சொன்னது…

M M பாடிய பாடல் - அவரின் விளக்கத்துடன்.

இணைப்பு கீழே

http://www.sendspace.com/file/jou0e9

Unknown சொன்னது…

நன்றி நாகராஜன் ஸார், உங்கள் லிங்க் காணொளியாகவும் கிடைத்தது. இன்று இணைத்திருக்கிறேன்.

கருத்துரையிடுக