பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 28 ஜூலை, 2013

மழைக்காலமும் பனிக் காலமும் சுகமானவை

வேகமான இசையில் வரும் பாடல். மிக கச்சிதமாக பாடியிருக்கிறார்கள். வாணி அம்மாவின் குரலில் ஆரம்பிக்கும் பாடல் சற்றும் தொய்வில்லாமல் அதே சுருதியுடன் அவரது குரலிலேயே முடிகிறது. இது போன்று ஒரு பாடல் இன்று வருமா என மனம் எதிர்பார்க்கிறது.

திரைப் படம்: சாவித்திரி (1980)
இயக்கம்: பரதன்
இசை: M S விஸ்வநாதன்
குரல்கள்: வாணி ஜெயராம், P ஜெயச்சந்திரன்
நடிப்பு: மேனகா, மனோரமா
பாடல்: கண்ணதாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjE4MzI2NF9kSWpBS19mMWMy/Mazaikalamum%20Panikalamum.mp3







ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ

மழைக்காலமும் பனிக் காலமும் சுகமானவை

மழைக்காலமும் பனிக் காலமும் சுகமானவை

மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில்

காதல் தேவதைகள் பாடும் பாடல்களில்

பரவசம் அடைகின்ற இதயங்களே

மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில்

காதல் தேவதைகள் பாடும் பாடல்களில்

பரவசம் அடைகின்ற இதயங்களே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ

மழைக்காலமும் பனிக் காலமும் சுகமானவை

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மேகம் செல்லும் பாதை தினம் மாறும் என்ற போதும்

மேகம் செல்லும் பாதை தினம் மாறும் என்ற போதும்

தாகம் எங்கு போகும் கடல் நீரை தேடி ஓடும்

தாகம் எங்கு போகும் கடல் நீரை தேடி ஓடும்

தினம் மயங்கி மயங்கி நெருங்கி நெருங்கி

வளர்ந்திடும் புதிய உறவும் புதிய இரவும் சுகமல்லவா

சுகமல்லவா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ

மழைக்காலமும் பனிக் காலமும் சுகமானவை

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பூந்தோட்ட மேடை அழகான இளமை சுதி பேதம் என்ன பேதம்

பூவோடு தேனும் தேனோடும் வண்டும் ஐந்தாவதான வேதம்

பூந்தோட்ட மேடை அழகான இளமை சுதி பேதம் என்ன பேதம்

பூவோடு தேனும் தேனோடும் வண்டும் ஐந்தாவதான வேதம்

ஒரு வீணை தன்னில் எவர் மீட்டினானும் புதிதாக தோன்றும் ராகம்...

ஊர்க்கோலத் தென்றல் யார் மேனி மீதும் இதமாக வந்து மோதும்...

இதமாக வந்து மோதும்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ

மழைக்காலமும் பனிக் காலமும் சுகமானவை...

சா நித நீ சனி சா நித நீ நீ சா நீ சா சா ப பா

சா நித நீ சம பா மக மா கா மா பா நீ சா ரி கா

கார் காலம் பார்த்து கனி மாமரத்தில்

கல்யாணம் செய்த கிளிகள்

பூர்வீகச் சொந்தம் பூர்வீக பந்தம்

புரியாத காதல் மொழிகள்

இது வேறு கோவில் இது வேறு பூசை

இதற்கான தீபம் விழிகள்

இளங்காலை இன்பம் இதமாக வேண்டும்

இவையன்றி ஏது வழிகள்

இவையன்றி ஏது வழிகள்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ

மழைக்காலமும் பனிக் காலமும் சுகமானவை

மாறன் தேரில் வரும் மாலை நேரங்களில்

காதல் தேவதைகள் பாடும் பாடல்களில்

பரவசம் அடைகின்ற இதயங்களே

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆ

மழைக்காலமும் பனிக் காலமும் சுகமானவை

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

1 கருத்து:

Raashid Ahamed சொன்னது…

ஜெயச்சந்திரனின் பாடல்களில் மிகவும் அருமையான பாடல். ஆனால் இந்த படம் சரியாக ஓடியதாக தெரியவில்லை.

கருத்துரையிடுக