பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி

குருவி உட்கார பனம்பழம் விழுந்தக் கதையாக இந்தப் பாடலை இணையத்தில் தவழவிட  நான் முடிவு செய்த இன்று நவராத்திரி காலம் ஆனது.  
அகர முதலியாக வரும் இந்தப் பாடலை போன்று வேறொரு பாடல் தமிழ் திரையுலகில் உண்டா என்பது தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் முழுமையாக இல்லாமல் அ, ஆ, இ, ஈ என்பதோடு முடிந்து மற்ற கதைகளை பேச ஆரம்பித்துவிடலாம்.
என்ன ஒரு இசை? 
என்னவொரு ஆண்மைக் குரலில் ஒரு பாடல்? 
என்னவொரு நடிப்பு?

திரைப்படம்: சரஸ்வதி சபதம் (1966)
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: K.V. மஹாதேவன்
நடிப்பு: சிவாஜி கணேசன், ஜெமினி, சாவித்திரி, K R விஜயா, தேவிகா

http://asoktamil.opendrive.com/files/Nl8yMTU1MTcwNl96UXVTdl9lYzI1/Agara%20muthala%20ezhuthellaam.mp3






அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய் தாயே

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி

இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய்
உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
உயிர்மெய் எழுத்தெல்லாம் தெரிய வைத்தாய்
ஊமையின் வாய் திறந்து பேச வைத்தாய்
அம்மா பேச வைத்தாய் 
அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி

எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்
எண்ணும் எழுத்தென்னும் கண் திறந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஏற்றம் தரும் புலமை ஆற்றல் தந்தாய்
ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்
ஐயம் தெளிய வைத்து அறிவு தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து குரல் தந்தாய்
ஓங்கார இசை தந்து உயர வைத்தாய் தேவி

போற்ற வைத்து புகழ் சாற்ற வைத்து
அறிவூற்றினோடு உயராற்றல் தந்தென்னை

அறிஞன் கவிஞன் கலைஞன் இவனென
அருளும் தமிழும் திகழும் கடலென

கற்றவரும் கொற்றவரும் முற்றுமே
அறிந்தவரும் நித்தம் நித்தம் புகழ்ந்திட
நின்னருளை தந்தருள்வாய்

உற்றார் சுற்றம் உறவினர் மாந்தர்
யானை சேனை படையுடன் வேந்தரு

பற்றும் பற்றை நீக்கிய ஞானி
பலரும் புகழ்ந்திட ஆக்கிய வாணி

தாயில்லாத பிள்ளையென்று
வாயில்லாத ஊமையென்று
ஆயிரங்களான கல்வி
வாய் திறந்து தந்த செல்வி

அன்னை உன்னை சரணமடைந்தேன்
தேவி

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

TMS அவர்களின் கணீர் குரலில் அற்புதமான பாடல்...

இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

நன்றி தனபால் ஸார். உங்கள் வாழ்த்துக்கள் நம் நண்பர்கள் அனைவருக்கும் சென்று சேரட்டும்.

கருத்துரையிடுக