பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 27 மே, 2014

கண் கவரும் சிலையே காஞ்சி தரும் கலையே

தெளிவான உச்சரிப்புடன் குரலும் அர்த்தமுள்ள பாடல் வரிகளும், கவனத்தை சிதறடிக்காத இசையும் இந்தப் பாடலுக்கு வலிமை. சிற்பியின் பெருமை சொல்லும் பாடல். சிறிய பாடலானாலும் வீரியமிக்க பாடல்.

திரைப் படம்: காஞ்சித் தலைவன் (1963)
நடிப்பு: எம் ஜி யார், பானுமதி, பத்மினி
இயக்கம்: A காசிலிங்கம்
இசை: K V மகாதேவன்
பாடல்: K D சந்தானம்
பாடியவர்: டி எம் எஸ்



http://asoktamil.opendrive.com/files/Nl8xMDQ1MDQyNl9aZ2ZOT19kYjQ5/kan%20kavarum%20silaiye.mp3













ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

கண் கவரும் சிலையே
காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த
தமிழகத்தின் நிதியே
கண் கவரும் சிலையே
காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த
தமிழகத்தின் நிதியே
கண் கவரும் சிலையே

பகை முடிக்க பலவகையாம்
படைக்கலங்கள் மோதும்
எழில் சிலை வடிக்க
சிறு உழியும் இருகரமும் போதும்
பகை முடிக்க பலவகையாம்
படைக்கலங்கள் மோதும்
எழில் சிலை வடிக்க
சிறு உழியும் இருகரமும் போதும்

முகை வெடிக்கும் முறுவலென
பெண்ணிதழில் தெரிவாய்
 முகை வெடிக்கும் முறுவலென
பெண்ணிதழில் தெரிவாய்
சினம் மூண்டெழுந்தால் ஆண்டவன்
பேய் தாண்டவமும் புரிவாய்
தாண்டவமும் புரிவாய

கண் கவரும் சிலையே
காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த
தமிழகத்தின் நிதியே
கண் கவரும் சிலையே

படிக்குமுன்னே செவியினில்
தேன் பாய வரும் தமிழ் போல்
நான் நினைக்குமுன்னே
பல வடிவாய் நெஞ்சமெல்லாம் நிறைவாய்
படிக்குமுன்னே செவியினில்
தேன் பாய வரும் தமிழ் போல்
நான் நினைக்குமுன்னே
பல வடிவாய் நெஞ்சமெல்லாம் நிறைவாய்
எனக்குமுன்னே வாழ்ந்தவர்கள்
எத்தனையோ கோடி
எனக்குமுன்னே வாழ்ந்தவர்கள்
எத்தனையோ கோடி
அந்த இடம் பெயர்ந்தார்
பெருமை எல்லாம் தொடர்கதைபோல் தருவாய்

கண் கவரும் சிலையே
காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த
தமிழகத்தின் நிதியே
கண் கவரும் சிலையே

4 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

நரசிம்மவர்மன் கதாபாத்திரத்துக்கு வாத்யாரைத் தவிர வேறொருவரை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. அவ்வளவு இயல்பாக நடித்திருப்பார். மனதில் நிற்கும் இனிய பாடல்.

அறிவியல் தமிழ் சொன்னது…

வணக்கம் நாங்கள் பூச்சரம் எனும் தளம்,

தமிழ் பிளாக்ஸ்பாட்களில் வழக்காமாக பயன்படுத்தும் எழுத்துருக்களுக்கு பதில் இணையுரு (WebFont) எழுத்துக்களை பயன்படுத்த எந்த நாங்கள் வசதி ஒன்றை அளிக்கிறோம். இது முழுக்க முழுக்க இலவசம் தான். தமிழ் பிளாக் ஸ்பாட் தளங்களை ஆங்கில தளங்கள் போன்று உருவத்திலும், அழகிலும் உயர்த்தவேண்டும் என்ற எண்ணம் தான் உங்களை நாங்களே இதுபோன்று அணுக வைத்துள்ளது.

- இணையுரு (WebFont) என்றால் என்ன? அதனால் என்ன பயன்?

- இதை பயன்படுத்துவதால் நம்முடைய பிளாக் ஸ்பாட்டிற்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமோ?

- இது அவர்களுடைய தளத்தை விளம்பரப்படுத்த செய்யப்படும் உத்தியோ?

- அவர்களாகவே தானாக வந்து உதவுவதாக சொல்வதில் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ?

என்றெல்லாம் உங்கள் மனதில் நிச்சயம் கேள்விகள் எழும். அவ்வாறு தாங்கள் பயப்படவோ அல்லது ஐயமுறவோ தேவையில்லை. 100% எங்களை நம்பலாம். நாங்கள் கீழே கொடுத்துள்ள பதிவை பாருங்கள் உண்மை விளங்கும்.

தமிழ் கணிமையை (Tamil Computing) வளர்ச்சியுறும் நோக்கில் தான் நாங்கள் செயல்படுகிறோம். மற்ற மொழியினர் இதுபோன்ற வசதிகளை எப்போதே செய்துவிட்டனர், ஆனால் நாம் இந்த வசதியை இப்போது தான் இந்த பதிவில் படித்துகொண்டு இருக்கிறோம். மற்றமொழிகளை போல நம் மொழியையும் அழகாக வைத்துகொள்ள வேண்டுமல்லவா?...

சும்மா... பேச்சுக்கு தமிழ் அழகு என்று சொல்வதை காட்டிலும் செய்து காட்டுவதை தான் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.

இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி பிளாக்ஸ்பாட் இதோ பாருங்கள். http://poocharamtamilforum.blogspot.in/2014/05/this-is-sample-post.html

இதோ இணையுருக்கள் எவ்வாறு இணைப்பது என்பதை பற்றிய கட்டுரை

1) http://poocharam.net/viewtopic.php?f=57&t=1891

2) http://poocharam.net/viewtopic.php?f=57&t=2053



(அல்லது)

1) http://puthutamilan.blogspot.in/2014/05/blog-post_14.html

2) http://puthutamilan.blogspot.in/2014/05/webfont-2.html



மேலும் ஏதேனும் உங்களுக்கு உதவியோ அல்லது ஐயமோ ஏற்பட்டால் தயங்காமல் rashlak@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது எங்கள் தள இடுகையிலோ அல்லது பிளாக்ஸ்பாட் இடுகையிலோ கேட்கலாம்.



நன்றி மற்றும் வணக்கம்

ராஜு.சரவணன்

(Please Remove this post after read)

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தலைவரின் மறக்க முடியாத இனிமையான பாடல்...

Unknown சொன்னது…

பால கணேஷ் சாருக்கும் தனபாலன் சாருக்கும் நன்றி.
ராஜூ சரவணன், நிச்சயமாக முயற்சிக்கிறேன். நன்றி.

கருத்துரையிடுக