பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 23 மே, 2014

முத்தமிழில் பாட வந்தேன்

ஒரு அயல் நாட்டுப் பெண்ணை தமிழ்ப் பாட்டுக்கு அழகாக அபிநயம் பிடிக்க வைத்திருப்பது அழகுதான். இந்தப் பாடலை பலர் கேட்டிருக்க மாட்டார்கள். அபூர்வமான பாடல்.
பூவை செங்குட்டுவன் அவர்களின் அழகான கவிதை. வாணி அவர்களின் பளீச் குரலில் காதில் தேன் பாய்கிறது. 

திரைப்படம்: மேல் நாட்டு மருமகள் (1975)
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
பாடல்: பூவை செங்குட்டுவன்
பாடியவர்: வாணி ஜெயராம்
நடிப்பு: சிவகுமார், ஜெயசுதா, கமல்ஹாசன்
இயக்கம்: A P நாகராஜன்










முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகை கண்டேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகை கண்டேன்
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்

வேலன் என்றால் வீரம் வரும்
கந்தன் என்றால் கருணை தரும்
 வேலன் என்றால் வீரம் வரும்
கந்தன் என்றால் கருணை தரும்
ஷன்முகனை சரணடைந்தால்
சங்கீதம் பாட வரும்
ஷன்முகனை சரணடைந்தால்
சங்கீதம் பாட வரும்

ஆறு படை வீட்டில் ஓடி விளையாடும்
ஸ்வாமி நாதனே சரவணனே
ஆறு படை வீட்டில் ஓடி விளையாடும்
ஸ்வாமி நாதனே சரவணனே
ஆறு முகம் கொண்டு ஆறுதல் தந்து
கோடி நலம் காட்டும் குருபரனே

முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகை கண்டேன்
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்

பாரத தாய் மடியினிலே
பண்புடனே தவழுகின்றேன்
பாரத தாய் மடியினிலே
பண்புடனே தவழுகின்றேன்
பழமை எல்லாம் நினைவூட்டும்
பைந்தமிழில் பாடுகின்றேன்
பழமை எல்லாம் நினைவூட்டும்
பைந்தமிழில் பாடுகின்றேன்

கால வரலாறு போற்றி புகழ் பாடும்
கவிதை யாவுமே தனி தமிழே
கால வரலாறு போற்றி புகழ் பாடும்
கவிதை யாவுமே தனி தமிழே

நாளும் முறையோடு நன்மை பல தேடி
வாழ வழி கூறும் திருக்குறளே

முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகை கண்டேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகை கண்டேன்
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான பாட்டு....

நன்றி...

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

வருகைக்கு நன்றி. தனபாலன் சார்.

கரோக்கி இசை அலைகள் சொன்னது…

இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல் ! மேலும் கோவில்களிலும் இடம் பெற்ற பாடல் ! வாணிஜெயராமை தவிர வேறு யாரலும் இந்த பாடலை இவ்வளவு இனிமையாக பாடியிருக்க முடியாது.

பால கணேஷ் சொன்னது…

வாணி ஜெயராம் பாடிய விதம்... அவரது குரலின் இனிமை... எத்தனை காலம் ஆனாலும் கேட்கையில் ரசிக்க வைக்கும் அழகுப் பாடல்.

கருத்துரையிடுக