பின்பற்றுபவர்கள்

திங்கள், 14 ஜூலை, 2014

ராகம் தாளம் பல்லவி அது காதல் பூபாளமே

இந்தப் படத்தின் இயக்குனர் எம்.பாஸ்கர்அவர்களின் இயக்கத்தில்தான் நமது ரஜினி முதன்முதலாக பைரவி படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த இயக்குனர் கடந்த 2013 ஜூலை மாதம் மாரடைப்பினால் காலமானார்.
ஷங்கர் கணேஷ் இசையில் இது ஒரு அருமையான பாடல்.

திரைப்படம்: தீர்ப்புகள் திருத்தப்படலாம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடல்: குருவிக் கரம்பை ஷண்முகம்
இயக்கம்: எம்.பாஸ்கர்
நடிப்பு: சிவ குமார், அம்பிகா
 











லா லா லா லா ல ல் ல லா
ல ல் ல லா லா லா லா ல லா
லா ல ல ல் ல லா லா
லா ல ல ல் ல லா லா
ல ல் லா ல ல ல் லா ல ல ல் லா

ராகம் தாளம் பல்லவி
அது காதல் பூபாளமே

ராகம் தாளம் பல்லவி
அது காதல் பூபாளமே

வானம் சிந்தும் நேரம்
ஆசை நெஞ்சில் மோதும்

பொங்கும் இந்நாளே
நம் பொன் நாள்

ஆ ஆ ஆ ஆ

பொங்கும் இந்நாளே
நம் பொன் நாள்

இதழ் தரும் மலரே
பழரச நதியே
என் தேகம் தீக்கடலே

கண்ணன் நெஞ்சின் தாகம்
கங்கை கிண்ணம் தீர்க்கும்
உன் மோகம் மின் காற்று மெல்ல அள்ள வா

இதழ் தரும் மலரே
பழரச நதியே
என் தேகம் தீக்கடலே

கண்ணன் நெஞ்சின் தாகம்
கங்கை கிண்ணம் தீர்க்கும்
உன் மோகம் மின் காற்று மெல்ல அள்ள வா

தோகை நீதான் காமன் பாலம்
ஆவல் தீர்க்கும் தேவ லோகம்

மாலைகள் சூடிக்கொள்ளும்
தேதி பார்க்கட்டும்

ராகம் தாளம் பல்லவி
அது காதல் பூபாளமே

வானம் சிந்தும் நேரம்
ஆசை நெஞ்சில் மோதும்

பொங்கும் இந்நாளே
நம் பொன் நாள்

ஆ ஆ ஆ ஆ
பொங்கும் இந்நாளே
நம் பொன் நாள்

வானும் மண்ணும்
தீபமேற்றி மாறும் நேரமிது
வானும் மண்ணும்
தீபமேற்றி மாறும் நேரமிது


பாவை மேனி பூவைப்போல
ஆகும் வேளையிது
பாவை மேனி பூவைப்போல
ஆகும் வேளையிது

காலங்கள் மேளங்கள்

நேரங்கள் தாளங்கள்

தேகங்கள் ராகங்கள்

கோலங்கள் போடுங்கள்

ராகம் தாளம் பல்லவி
அது காதல் பூபாளமே

வானம் சிந்தும் நேரம்

ஆசை நெஞ்சில் மோதும்

பொங்கும்
இந்நாளே
நம் பொன் நாள்
ஆ ஆ ஆ ஆ
பொங்கும் இந்நாளே
நம் பொன் நாள்

லா லா லா லா ல ல் ல லா
ல ல் ல லா லா லா லா ல லா

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிமையான பாடல்...

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

இனிமையான பாடலைக்கேட்டு இரசித்தேன்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கருத்துரையிடுக