பின்பற்றுபவர்கள்

திங்கள், 26 ஜனவரி, 2015

கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா...kanni venduma venduma..


AVM ராஜன் இனிமையாக சிரித்துக்கொண்டே பாடிய ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று. மற்றபடி எப்போதும் வயிற்றில் ஏதோ கோளாறு உள்ளது போலவே நடித்துக் கொண்டிருப்பார். இதில் ராஜனும் புஷ்பலாதாவும் இளமை அழகு.

திரைப்படம்: பச்சை விளக்கு (1964)
பாடியவர்: பி.பி, ஸ்ரீநிவாஸ், எல்.ஆர். ஈஸ்வரி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
நடிப்பு: சிவாஜி, விஜய குமாரி, புஷ்பலதா, AVM ராஜன்





கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா
மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா
மேடையில்லாமல் ஆடட்டுமா
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா
மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா
மேடையில்லாமல் ஆடட்டுமா

ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா
அன்பு மந்திரம் ஓதட்டுமா
ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா
அன்பு மந்திரம் ஓதட்டுமா
வானமண்டலம் போக வேண்டுமா
வண்ணத் தேரிலே ஏறட்டுமா
வானமண்டலம் போக வேண்டுமா
வண்ணத் தேரிலே ஏறட்டுமா

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை
நின்று வாழ்ந்து வரும் இன்பமான சுகம்
இருவர் உறவில் பெறுவோமே

கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா
ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா
அன்பு மந்திரம் ஓதட்டுமா

கொள்ளை கொள்ளவா கூட்டிச் செல்லவா
கொஞ்சிக் கொஞ்சியே பேசட்டுமா
கொள்ளை கொள்ளவா கூட்டிச் செல்லவா
கொஞ்சிக் கொஞ்சியே பேசட்டுமா

பள்ளி கொள்ளவா பாட்டுப் பாடவா
பக்கம் சாய்ந்த படி தூங்கட்டுமா
பள்ளி கொள்ளவா பாட்டுப் பாடவா
பக்கம் சாய்ந்த படி துங்கட்டுமா

கால தேவன் நம்மைத் தேடும் காலம் வரை
காதல் இன்பம் என்னும் ஊமை நாடகத்தில்
ஆடிப் பாடி மகிழ்வோமே

கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா

ஆசை வேண்டுமா அச்சம் வேண்டுமா
அன்பு மந்திரம் ஓதட்டுமா

ஆஹ ஹா ஹஹா ஹஹா ஹா ஹா
ஓஹொ ஹோ ஹொஹோ ஹொ ஹோ ஹொ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக