பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 23 ஜனவரி, 2015

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..ninaippathellaam nadanthuvital

"எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது"

இது தெரியாத போதே மனிதன் இந்த ஆட்டம் ஆடுகிறான். எல்லாம் தெரிந்துவிட்டால்.....?
கருத்தாழம் மிக்க ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று.

திரைப்படம்: நெஞ்சில் ஓரு ஆலயம் (1962)
இசை: M. S. விஸ்வநாதன், T. K. ராமமூர்த்தி
பாடியவர்: P. B. ஸ்ரீநிவாஸ்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்:  ஸ்ரீதர்
நடிப்பு: முத்துராமன், கல்யாண்குமார், தேவிகா







நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை

முடிந்த கதை தொடர்வதில்லை
இறைவன் ஏட்டினிலே
தொடர்ந்த கதை முடிவதில்லை
மனிதன் வீட்டினிலே
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை

ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது
ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால்
துன்பம் ஏதுமில்லை
ஒன்றிருக்க ஒன்று வந்தால்
என்றும் அமைதியில்லை
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை

எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால்
அமைதி என்றுமில்லை

1 கருத்து:

Raashid Ahamed சொன்னது…

புண்பட்ட மனது, வருத்தம் அடைந்த மனது, விதியால் நொந்த மனது இவற்றுக்கு ஆறுதல் அளிக்கும் பாடல்களில் முதலாவதாக இதையே வைக்கலாம்.

கருத்துரையிடுக