பின்பற்றுபவர்கள்

புதன், 24 ஜூன், 2015

திங்கள் மாலை வெண்குடையான்...thingal malai venkudaiyaan...


இளங்கோவடிகள், தம் காப்பியத்தில், நாட்டியம், இசை ஆகிய இரு கலைகளையும் பற்றி மிக விரிவாக எடுத்துரைக்கின்றார். முப்பது காதைகளுடைய காப்பியத்தில், நான்கு காதைகள் மக்களின் ஆடல் பாடல்களைப் பற்றியே அமைந்துள்ளன. அவை கானல்வரி, வேட்டுவவரி, ஆய்ச்சியர்குரவை, குன்றக்குரவை ஆகிய பகுதிகளாகும். 
கானல்வரியில் கடற்கரைச் சோலையிலுள்ள மீனவர்களின் பாடல்களும், காவிரி ஆறு பற்றிய பாடல்களும் அமைந்துள்ளன.  வேட்டுவவரியில் காளியை வழிபடும் வேடர்களின் பாடல்களை அமைத்துள்ளார்.  ஆய்ச்சியர் குரவையில் கண்ணனை வழிபடும் இடையர் மகளிரின் ஆடலும் பாடலும் உள்ளன.குன்றக்குரவையில் மலைப்பகுதியில் வாழும் மக்களின் ஆடல் பாடல்கள் உள்ளன. இவை நான்கும் தவிர,  இருபத்தொன்பதாவது காதையில் பலவகை நாட்டுப் பாடல்களைச் சுருக்கமாகத் தந்துள்ளார். பெண்கள் கூடியிருந்து விளையாடும் அம்மானைப் பாடல், பந்தடித்துப் பாடும் கந்துகவரி, ஊசலாடிப்பாடும் ஊசல்வரி, நெல்குற்றும்போது பாடும் வள்ளைப்பாட்டு என்பவற்றை அமைத்துள்ளார்.  இவையெல்லாம் இளங்கோவடிகளின் கலையுள்ளத்தையும்,  மக்களின் ஆடல் பாடல்களைப் போற்றி மதித்த பண்பையும் வெளிப்படுத்துகின்றன. 
தமிழர்களின் இசை இலக்கண நூலாகவும் சிலப்பதிகாரம் விளங்குகிறது.  வாழ்த்துப்பாடல், அரங்கேற்றுகாதை, கானல்வரி, வேனிற்காதை, வேட்டுவவரி, ஆய்ச்சியர்குரவை, துன்பமாலை, ஊர் சூழ்வரி, வஞ்சினமாலை, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை ஆகியன அக்கால இசைக்கலையைப் பற்றியும் இசைப்பாடல் அமைதி பற்றியும் விளக்குகின்றன.
மாதவி,  தன் நாட்டியக் கலையை நாட்டிய ஆசிரியனிடம் மட்டும் பயிலவில்லை. அவ்வாசிரியனுடன், இசை, தண்ணுமை, குழல், யாழ் ஆசிரியர்களும் அவளுக்குப் பயிற்சி அளித்தனர். இச்செய்தி,

 நன்றி: srmuniv.ac.in/tamilperayam

The singer is KJ Yesudoss (MalayAlee), the other version is sung by P Susheela (Telugu) tuned by Salil (Bengali), for a movie to be directed by Ramu Kariat (a MalayAlee). Yet, the song has perfectly captured the forlorn spirit of kANalvari and the grand epic. Yesudoss has come up with an impeccable rendition. The song is loosely based in chakravaaham (one the generic carnatic raaga).
The variation of this by P Susheela is missing the emotional undercurrent of kANalvari and has a more celebration mood to it, with chorus in the interludes. I guess Salil should have been briefed about kANalvari, that it takes places in a beach and during a carnival atmosphere. He has attempted two variations, one manifesting the emotions and the other the locale. But kANalvari lyrics have more emotive desolateness to them and Yesudoss' version stands out easily, bringing out the emptiness of kOvaln's heart.
நன்றி: www.salilda.com


இங்கே பாடல் வரிகள் சுசீலா அம்மா பாடியுள்ள பாடலில் இருந்து பதியப் பெற்றது. 1973களில் வழக்கம் போல சிலோன்  வானொலி இந்தப் பாடலை பிரபலப் படுத்தியது. பாடல் காட்சிக் கிடைக்கவில்லை. இந்தப் படம் வெளியானதா என்பதிலேயே பல கருத்து வேறுபாடுகள். நம்ம நாகராஜன் சார்தான் விளக்கம் சொல்லணும்
படம் : கரும்பு படம் : கரும்பு (1973)
குரல் : P சுசீலா மற்றும் K J யேசுதாஸ் தனித் தனியே பாடிய பாடல்கள்.
பாடல் : இளங்கோ அடிகள்
இசை : சலீல் சௌத்ரி
இயக்கம்: ராமுகாரியத் 












திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அது ஓச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி 
புலவாய் வாழி காவேரி 

கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய் 
மங்கை மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி 

திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அது ஓச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி 
புலவாய் வாழி காவேரி

மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அது ஓச்சி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி 
புலவாய் வாழி காவேரி 

கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய் 
மன்னும் மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி 

உழவர் ஓதை மதகோதை
உடை நீர் ஓதை தண்பதம் கொள்
விழவர் ஓதை திறந்தார்ப்ப
விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி 
நடந்தாய் வாழி காவேரி 

விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்ததெல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன் தன்
வளனே வாழி காவேரி 

உழவர் ஓதை மதகோதை
உடை நீர் ஓதை தண்பதம் கொள்
விழவர் ஓதை திறந்தார்ப்ப
விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி 
நடந்தாய் வாழி காவேரி 

பாடல் : இளங்கோ அடிகள் இசை : சலீல் சௌத்ரி பாடலைக் கேட்க இங்கே திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல் அது ஓச்சி கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி ! புலவாய் வாழி காவேரி ! கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற்கண்ணாய் ! மங்கை மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி ! மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அது ஓச்சி கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி ! புலவாய் வாழி காவேரி ! கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாதொழிதல் கயற்கண்ணாய் ! மன்னும் மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி ! உழவர் ஓதை மதகோதை உடை நீர் ஓதை தண்பதம் கொள் விழவர் ஓதை திறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி ! நடந்தாய் வாழி காவேரி ! விழவர் ஓதை திறந்தார்ப்ப நடந்ததெல்லாம் வாய்காவா மழவர் ஓதை வளவன் தன் வளனே வாழி காவேரி !

2 கருத்துகள்:

NAGARAJAN சொன்னது…

இப்பாடல்கள் 1973ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டன. இப்படம் வெளி வரவே இல்லை. மலையாள இயக்குனர் ராமு கரியாத் என்பவரால் இயக்குவதாக இருந்தது.

Unknown சொன்னது…

நன்றி நாகராஜன் சார்.

கருத்துரையிடுக