பின்பற்றுபவர்கள்

திங்கள், 2 நவம்பர், 2015

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்


சத்தியத்தின் எல்லையிலே
உயர் சமரச நெறிகளிலே
அன்பின் சக்தியிலே
தேச பக்தியிலே
உண்மை சமத்துவம் காட்டும் சன்மார்க்கத்திலே
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
நம்மில் பலர் இதை நம்புகின்றோம்... சிலரோ... அவர்களுக்குதான் வாழ்க்கை நல்ல முறையில் அமைகிறது...

திரைப்படம்: நல்லவன் வாழ்வான் (1961)
பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: டி.ஆர். பாப்பா
குரல்கள்: சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா
இயக்கம்: பா. நீலகண்டன்
நடிப்பு:  எம். ஜி. ராமச்சந்திரன், ராஜசுலோச்சனா

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய்
வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய்
விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய்
விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய்

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

நல்லவர் போல் வெளி வேஷங்கள் அணிந்து
நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை
நாணயத்தோடு நல்லறம் காத்து
நடப்பவர் தம்மை மறப்பதில்லை

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

தன்மானம் காப்பதிலே அன்னை
தந்தையைப் பணிவதிலே பிறந்த
பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம் காணப்
பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

சத்தியத்தின் எல்லையிலே
உயர் சமரச நெறிகளிலே
சத்தியத்தின் எல்லையிலே
உயர் சமரச நெறிகளிலே
அன்பின் சக்தியிலே தேச பக்தியிலே
உண்மை சமத்துவம் காட்டும் சன்மார்க்கத்திலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

1 கருத்து:

Yarlpavanan சொன்னது…

இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
நன்மை தரும் பொன்நாளாக அமைய
வாழ்த்துகள்!

யாழ்பாவாணன்
http://www.ypvnpubs.com/

கருத்துரையிடுக