பின்பற்றுபவர்கள்

திங்கள், 30 நவம்பர், 2015

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது engiruntho oru kural

வாணி ஜெயராம் பாடிய பாடல்களில் இது ஒரு மகுடம். இனிமையான இசையில் அழகான பாடல். ஆனால் படம்தான் அப்போதைய காலகட்டத்திலேயே கொஞ்சம் நெளிய வைத்த படம். சிவாஜி பிழிந்தேடுத்திருப்பார்.


திரைப்படம்: அவன் தான் மனிதன் (1975 )

நடிப்பு: சிவாஜி கணேசன், ஜெயலலிதா

குரல்: வாணி ஜெய்ராம்

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடல்: கண்ணதாசன்


இயக்கம்: ஏ.சி.திருலோகசந்தர்
ஆ ஆ ஆ  ஆ ஆ ஆ ஆ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

அது எந்த கைகள் தந்த ஒளியோ

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

அது எந்த கைகள் தந்த ஒளியோ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

தாழங் குடைகள் தழுவும் கொடிகள்

தாமரைப் பூக்களின் தோட்டம்

தாழங் குடைகள் தழுவும் கொடிகள்

தாமரைப் பூக்களின் தோட்டம்

மாலை மணிகள் மந்திரக் கனிகள்

மழலை என்றொரு தோட்டம்

மாளிகையில் ஒரு மதி வந்தது

அது எந்த வானத்து மதியோ

மாளிகையில் ஒரு மதி வந்தது

அது எந்த வானத்து மதியோ

மாயமாக ஒரு ஒலி வந்தது

அது எந்த ஆலயத்து மணியோ


எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

அது எந்த கைகள் தந்த ஒளியோ

கதிரொளி தீபம் கலசம் ஏந்தி

கண்ணன் வருகின்ற கனவு

கதிரொளி தீபம் கலசம் ஏந்தி

கண்ணன் வருகின்ற கனவு

கண்டனள் ஒருத்தி வந்தனன் கண்ணன்

கண்கள்

கங்கையிலே புது புனல் வந்தது

அது எந்த மேகம் தந்த புனலோ

கங்கையிலே புது புனல் வந்தது

அது எந்த மேகம் தந்த புனலோ

மங்கையிடம் ஒரு அனல் வந்தது

அது எந்த மன்னன் தந்த அனலோ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

அது எந்த தேவதையின் குரலோ

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது

அது எந்த கைகள் தந்த ஒளியோ

எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது


அது இந்த தேவதையின் குரலோ

1 கருத்து:

Raashid Ahamed சொன்னது…

மிகவும் இனிய பாடல் ! வாணிஜெயராம் பாடியவற்றில் ஒரு அற்புத பாடல். இந்த படத்தில் அன்பு நடமாடும் கலைக்கூடமே என்றொரு பாடலை டிஎம்எஸ்ஸோடு சுசீலா பாடியிருப்பார்கள் ! இந்த பாடலை வாணிஜெயராமை பாடவைத்தால் நன்றாயிருக்கும் என்ற ரகசியத்தை அறிந்தவர் மெல்லிசை மன்னர் தான்.

கருத்துரையிடுக