பின்பற்றுபவர்கள்

வியாழன், 24 டிசம்பர், 2015

சத்திய முத்திரை கட்டளை இட்டது

அனைத்து நட்புகளுக்கும் எங்களது இனிய கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்று இந்த இனிய பாடல்.

திரைப்படம்: கண்ணே பாப்பா ()
இயக்கம்: P மாதவன்
பாடியவர்: P சுசீலா
நடிப்பு:விஜயகுமாரி, முத்துராமன்
பாடல்: கண்ணதாசன்
இசை: M S விஸ்வநாதன்
சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்

சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்

அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மெரி மெரி கிருஸ்மஸ்
ஹாப்பி ஹாப்பி கிருஸ்மஸ்

மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேரி மாதா தேவ மகனைக் காத்தது எப்படியோ
தேவ தூதன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே
அவன் ஆலயம் என்பது நம் வீடு
மணி ஓசையைக் கேட்பது பண்பாடு
அவன் ஆலயம் என்பது நம் வீடு
மணி ஓசையைக் கேட்பது பண்பாடு

சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்

அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மெரி மெரி கிருஸ்மஸ்
ஹாப்பி ஹாப்பி கிருஸ்மஸ்

வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்
வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்
ராஜ வாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே
நாளை அல்ல தேவனின் கருணை இன்றே கைகளிலே
அவன் பாதங்க்கள் கண்டால் அன்போடு
ஒரு பாவமும் நம்மை அணுகாது
அவன் பாதங்க்கள் கண்டால் அன்போடு
ஒரு பாவமும் நம்மை அணுகாது

சத்திய முத்திரை கட்டளை இட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது
பாலகன் ஏசுவின் கீதம்

அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மெரி மெரி கிருஸ்மஸ்
ஹாப்பி ஹாப்பி கிருஸ்மஸ்
மெரி மெரி கிருஸ்மஸ்
ஹாப்பி ஹாப்பி கிருஸ்மஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக