பின்பற்றுபவர்கள்

புதன், 30 டிசம்பர், 2015

மாலே. மணிவண்ணா.


எத்தனை பேர் பாடியிருந்தாலும் என்னமோ எனக்கு M S சுப்புலட்சுமி அம்மையாரின் இந்தப் பாடலில்தான் ஒரு ஈர்ப்பு.
எப்போதாவது மார்கழி மாதம் மன்னார்குடி செல்ல நேர்ந்தால் அதி காலையில் ஒத்தைத்  தெரு பிள்ளையார் கோவிலில் ஒலிபரப்பாகும்  இந்தப் பாடலை காலையில் உட்கார்ந்து கேட்பது அலாதி சுகம் தரும். இந்த முறையும் அனுபவித்தேன்.

பொருளுரை...நன்றி: http://balaji_ammu.blogspot.in

அடியார்களை உன் மீது மயக்கங்கொள்ளச் செய்த மாலனே! நீலமணி வண்ணக் கண்ணனே ! எங்கள் குலப்பெரியோர் நீண்ட காலமாக கடைபிடித்து வந்த காரணத்தாலே, நாங்களும் இந்த மார்கழி நீராடலைத் தொடர்கிறோம் ! நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் நோன்புக்குத் தேவையான,

பால் போன்ற நிறமுடைய, உலகங்கள் எல்லாம் அதிரும் வகையில் ஒலியை ஏற்படுத்த வல்ல (உன் இடக்கையில் உள்ள) பாஞ்ச சன்னியத்தை ஒத்த வெண்சங்குகளையும், அகலமான பறை வாத்தியங்களையும், பல்லாண்டு பாடுபவர்களையும், அழகிய விளக்குகளையும், கொடியையும், விதானத் துணியையும் ஆலின் இலையில் துயில்பவனான நீ, கருணை கூர்ந்து எங்களுக்கு அளிப்பாயாக!


மாலே. மணிவண்ணா
திருமாலே மணிவண்ணா
மார்கழி நீராடுவான்
மாலே. மணிவண்ணா
மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள்
வேண்டுவன கேட்டியேல்
மேலையார் செய்வனகள்
வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து
உன் பாஞ்ச சன்னியமே
பால் அன்ன வண்ணத்து
உன் பாஞ்ச சன்னியமே
பால் அன்ன வண்ணத்து
உன் பாஞ்ச சன்னியமே
பால் அன்ன வண்ணத்து
உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள்
போய்ப் பாடுடையனவே
போல்வன சங்கங்கள்
போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே
பல்லாண்டு இசைப்பாரே
சாலப் பெரும் பறையே
பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே
கோல விளக்கே
கொடியே விதானமே
கோல விளக்கே
கொடியே விதானமே
ஆலின் இலையாய்
அருளேலோர் எம்பாவாய்
ஆலின் இலையாய்
அருளேலோர் எம்பாவாய்
ஆலின் இலையாய்
அருளேலோர் எம்பாவாய்
ஆலின் இலையாய்
அருளேலோர் எம்பாவாய்
மாலே. மணிவண்ணா
திருமாலே மணிவண்ணா
ஆ  ஆ  ஆ  ஆ  ஆ


1 கருத்து:

Lingaprabu S சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

கருத்துரையிடுக