பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 1 ஜனவரி, 2016

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது

எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....


திரைப்படம்: குடும்பத்தலைவன் (1962)

இசை: கே. வி. மகாதேவன்
நடிப்பு: எம். ஜி. ஆர் சரோஜா தேவி
இயக்கம்: எம். ஏ. திருமுகம் 
பாடியவர்:டி எம் எஸ்

பாடல்: கண்ணதாசன்


உலகில் வாழும் மிருகங்களுக்கும் பிற உயிரினங்களும் இயற்கையாகவே சில குணங்கள் அமைகின்றன. புலி, சிங்கம் போன்ற விலங்குகளுக்கு இயல்பாகவே சினத்துடன் சீறும் குணமுள்ளது. யானை அனைத்து விலங்குகளிலும் அதிக பலம் கொண்டதாக விளங்கினாலும் அது பெரும்பாலும் அமைதியாகவே இருக்கிறது. புதிய நபர்களையோ வேறு நாய்களையோ கண்டால் குரைக்கும் குணம் எல்லா நாய்களுக்கும் உண்டு. கூடி வாழும் இயல்பு காக்கைகளிடம் அமைந்துள்ளது.  இவ்வாறாக அனைத்து உயிரினங்களுக்கும் பிரத்தியேகமான குணங்களைப் படைத்த இறைவன் மனிதர்களுக்கு மட்டும் மாறுபட்ட குணங்களைக் கொடுத்தது ஏனோ?


நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகுமாம் குணம்

என்றாள் ஔவைப் பிராட்டி. இங்கே குலம் என்பது ஒருவர் பிறந்து வளரும் சூழ்நிலையைக் குறிப்பதாகும். எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, சாதியையோ சேர்ந்தவர் என்று எடுத்துக் கொள்வது தவறு. ஒருவன் இளம் வயது முதலே கல்வியிலும் தர்ம நெறிகளிலும் சிறந்து விளங்கும் நல்லோரின் சேர்க்கையைப் பெற்று வளர்வானாகில் அவன் நல்ல குணங்களையே பெறுதலும், தீய குணங்களும் தீய பழக்க வழக்கங்களும் நிறைந்தவருடன் பழகும் சூழ்நிலையில் வளர்கையில் தீய குணங்களைப் பெறுதலும் இயல்பு.
இயல்பாகவே அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, பொய் நீக்கி உண்மையே உரைத்து வாழும் உத்தமர்கள் என்றும் தீய வழியில் செல்வதில்லை, எத்தகைய துன்பங்கள் நேரிட்டாலும் தீய குணங்களைப் பெறுவதுமில்லை.
இயல்பாகவே காமம், குரோதம், கோபம், லோபம், மதம், மாத்சர்யம், ஐயம், அச்சம் முதலிய தீய குணங்களை வளர்த்துக்கொண்ட மனிதர்கள் பொதுவாகத் தம் வாழ்நாளில் என்றும் திருந்துவதில்லை. அவர்களது தீய குணத்தாலும், தீய செயல்களாலும் விளைந்த தீமைகள் அவர்கள் இறந்து அவர்களது உடல்களைக் கட்டையில் வைத்து எரிக்கையிலும் மறைவதில்லை.

www.thamizhisai.comமாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
ஹஹஹ ஓஹோஓஹோ
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது

ஹஹஹ ஓஹோஓஹோ
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்
காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்
காட்டுப் புலியை வீட்டில் வச்சாலும்
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்

மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
ஹஹஹ ஓஹோஓஹோ
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

வரவறியாமல் செலவழிச்சாலும் நெலைக்காது
மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது
காலமில்லாமல் வெத வெதைச்சாலும் முளைக்காது
காத்துல வெளக்க ஏத்தி வச்சாலும் எரியாது
திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்

திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்

ஓஹோஹோஹோஹொஹொஹோ
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது
ஹஹஹ ஓஹோஓஹோ
ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக