பின்பற்றுபவர்கள்

சனி, 9 ஜனவரி, 2016

அங்கே மாலை மயக்கம் யாருக்காக


இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை... இந்த இரண்டு வரிகளில் காதலை சொல்லிவிட்டார் கவிப்பேரரசு கண்ணதாசன். அந்தக் காலத்தில் BOXHIT படமும் பாடலும். இன்றைய தலைமுறைக்கு பிடிக்காதுதான்...திரைப்படம்: ஊட்டி வரை உறவு (1967)
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: P சுசீலா, டி எம் எஸ்
இயக்கம்: C V ஸ்ரீதர்
நடிப்பு: சிவாஜி, K R விஜயா
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்

ஆடச் சொல்வது தேன் மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
ஆடச் சொல்வது தேன் மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு

அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்

கேட்டுக் கொள்வது காதலின் உரிமை
கேட்டால் தருவது காதலி கடமை
கேட்டுக் கொள்வது காதலின் உரிமை
கேட்டால் தருவது காதலி கடமை
இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை
இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை

லாலா
ஆஹா

அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்

1 கருத்து:

ராஜி சொன்னது…

இந்த பாடல் படமாக்கப்பட்டபோது விஜயாம்மா 6 மாத கர்ப்பிணியாம். என் அம்மா சொல்லுவாங்க.

கருத்துரையிடுக