பின்பற்றுபவர்கள்

திங்கள், 11 ஜனவரி, 2016

பெண் மானே சங்கீதம் பாடி வா

இன்று வரை இந்தப் பாடலை பதிவேற்றிவிட்டேன் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போது கிணற்றுத்தவளையில் எங்கு தேடினாலும் இல்லை இல்லை என்கிறது.
இளையராஜ, SPB, ஜானகி கூட்டணியில் ஒரு மகா அருமையான பாடலை உங்களுக்கு வழங்குவதில் miss பண்ணப் பார்த் தேன்..திரைப்படம்: நான் சிவப்பு மனிதன் (1985)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
நடிப்பு: ரஜினி, அம்பிகா
இயக்கம்: S A சந்திரசேகர்
பாடல்: வாலி (சரியா?)
Download Music - Play Audio - Pen Mane Sangeetham-naan siv...


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஹா ஹா  ஹா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஹா ஹா  ஹா

பெண் மானே சங்கீதம் பாடி வா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்
பெண் மானே சங்கீதம் பாடி வா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா

தேன் மழை நீ ஹோய்
மார்பிலே தூவவோ
தேவதை நீ ஹோய்
நான் தினம் தேடவோ

கையருகில் பூமாலை
காதல் என்னும் கோபுரம்
மை விழியில் நீ தானே
வாழ்கிறாய் ஓர் புறம்

என் காதல் வானிலே
வெண் மேக ஊர்வலம்
காணுவேன் தேவியை
கண்களின் விழாவில்

உன் மானே சங்கீதம்  பாடவா
உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும்
உன் தேனே வந்தேனே
உன் மானே சங்கீதம்  பாடவா

லாலால்ல லாலா லாலால்ல லாலா
யாத்திரை ஏன் ஹோய்
ராத்திரி நேரமே
போர்களம் தான் ஹோய்
பூக்களின் தேகமே

தேக மழை நான் ஆகும்
தேவியை தேடுவேன்
ஈர வயல் நீயாக
மேனியை மூடுவேன்

கண்ணோரம் காவியம்
கை சேரும் போதிலே
வானமும் தேடியே
வாசலில் வாராதோ

பெண் மானே சங்கீதம் பாடி வா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா
உல்லாசம் ஆயிரம்
உன் பார்வை தேன் தரும்
உன் நாணம் செவ்வானம்
பெண் மானே சங்கீதம் பாடி வா
அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா


3 கருத்துகள்:

Unknown சொன்னது…

அருமையான பாடல்.நீண்ட நாட்களுக்கு பிறகு இப்பொது தன கேட்கிறேன்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பால்ய காலத்திற்கு கொண்டு செல்லும் இந்தப்பாடலை எப்போது கேட்டாலும்...

Unknown சொன்னது…

பாடலை இயற்றியவர் கவிஞர் மு.மேத்தா

கருத்துரையிடுக