பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 18 நவம்பர், 2016

நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு.. Naloru medai pozhuthoru




திரைப்படம்: ஆசை முகம் (1965)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு

கணீர் என்ற  குரலில் தெளிவான  ஆர்பாட்டம் இல்லாத பாடல். கருத்து மிக்க  பாடல். இன்று அல்ல  எந்த  காலகட்டத்து பொருத்தமான  பாடல்.









நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
நாவில் ஒன்று நினைவில் ஒன்று
அதன் பேர் உள்ளமல்ல
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
உள்ளத்தில் வைத்ததை உதட்டிலும் வைப்பவன் எவனோ அவனே மனிதன்
எவனோ அவனே மனிதன்
ஊரார் வேர்வையில் உடலை வளர்ப்பவன் உலகத்தில் கோழைகள் தலைவன்
உலகத்தில் கோழைகள் தலைவன்
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
காட்டில் நிலவாய் கடலில் மழையாய்
காட்டில் நிலவாய் கடலில் மழையாய்
பிறந்தால் யாருக்கு லாபம்?
பிறந்தால் யாருக்கு லாபம்?
பகையில் துணையாய் பசியில் உணவாய் இருந்தால் ஊருக்கு லாபம்
இருந்தால் ஊருக்கு லாபம்
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு
அவன் பேர் மனிதனல்ல
கூரைகளெல்லாம் கூட வளர்ந்தால் கோபுரமாவதில்லை
கோபுரமாவதில்லை
குருவிகளெலாம் உயரப் பறந்தால் பருந்துகள் ஆவதில்லை
பருந்துகள் ஆவதில்லை
நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு

அவன் பேர் மனிதனல்ல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக