பின்பற்றுபவர்கள்

திங்கள், 9 மே, 2011

சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்...

இசையமைப்பாளர் R ராமானுஜம் மிகச் சிறப்பாக இசையமைத்து மிக அருமையாக இளமையை கிளரும் வகையில் S P B யும், P சுசீலா அம்மாவும் கலக்கி இருக்கிறார்கள்.


திரைப் படம்: ஆனந்த பைரவி (1978)
இசை: R ராமானுஜம்
நடிப்பு: ரவிசந்திரன், K R விஜயா
இயக்கம்: மோகன் காந்திராம்



Music File Hosting - Listen Audio -





சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்....
அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம்...
கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்...
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்...

சிரித்தாய் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன்...
அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன்...
கேட்டாய் அந்த கேள்வியில் நான் மகிழ்ந்தேன்...
கொடுத்தாய் அந்த கருணையில் என்னை மறந்தேன்...

சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்...

உங்களின் அன்பு நினைவினிலே...
என் மனம் வாழும் உலகினிலே...
கண்களின் ஜீவ ஒளியினிலே...
சொர்கம் தோன்றுமோ...

தேவியின் பால் மணம் தேவனின் கோபுரம்...
தேவியின் பால் மணம் தேவனின் கோபுரம்...
அழகின் மடியில் வசந்தம் மலரும்...
அழகின் மடியில் வசந்தம் மலரும்...

அத்தான்...

சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்...

குங்கும கோலம் முகத்தினிலே...
மங்கள தாலி கழுத்தினிலே...
சந்தன பேழை அழகினிலே...
தெய்வம் மயங்குமோ...

காலமே ஓடி வா...
காவியம் பாடி வா...
காலமே ஓடி வா...
காவியம் பாடி வா..

உயிரில்...
ம் ம் ம் ம்...
உணர்வில்...
ஓ ஓ ஓ ஓ...
கலந்தே...
ஆ ஆ ஆ...
மகிழ்வோம்...

உயிரில் உணர்வில் கலந்தே மகிழ்வோம்...

அன்பே...

சிரித்தால் அந்த சிரிப்பில் நான் மலர்ந்தேன்...
அணைத்தாய் அந்த அணைப்பில் நான் கனிந்தேன்...

கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்...
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்..

சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்...


ஞாயிறு, 8 மே, 2011

முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு..

மற்றுமோரு அருமையான அமைதியான பாடல் SPB, P சுசீலா குரல்களில்


திரைப் படம்: யாருக்கு மாப்பிள்ளை யாரோ (1975)
இசை: விஜய பாஸ்கர்
இயக்கம்: S P முத்துராமன்
நடிப்பு: ஜெய்ஷங்கர், ஜெயசித்ரா



http://www.divshare.com/download/14783590-ddc



முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு..
செவ்வந்தி பூவின் கண்ணங்கள் மீது சித்திர கோலமிடு..
முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு..

என்னடி தேவி பெண்மையின் அழகை..
என்னடி தேவி பெண்மையின் அழகை..
மீட்டவா..
தாகமா..
அணைக்கவா..
ஆசையா..
சுவைக்க கூடாதா...சுவைக்க கூடாதா...ஆ ஆ ஆ ஆ ஆ
செவ்வந்தி பூவின் கண்ணங்கள் மீது சித்திர கோலமிடு..

மேனியில் விழுந்து ஞானத்தில் கலந்து..
மேனியில் விழுந்து ஞானத்தில் கலந்து..
ஆடவா..
பாடவா..
கூட வா..
கூடவா..
என்னைக் கேட்காதே..என்னைக் கேட்காதே..
முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு..

பிறர் அறியாமல் ரகசியம் பேசும்..
பிறர் அறியாமல் ரகசியம் பேசும்..
கண்களா..
கைகளா..
கால்களா..
மேனியா..
சொல்லித் தெரியாதே..சொல்லித் தெரியாதே..ஆ ஆ ஆ ஆ
செவ்வந்தி பூவின் கண்ணங்கள் மீது சித்திர கோலமிடு..
முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு..


சனி, 7 மே, 2011

தங்க தேரோடும் அழகினிலே இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்

ஷங்கர் கணேஷ் இசையில் மீண்டும் ஒரு மென்மையான பாடல்.


திரைப் படம்: ரகுபதி ராகவ ராஜாராம்
பாடியவர்கள்: S P B, P சுசீலா
பாடல்: வாலி
இசை: ஷங்கர் கணேஷ்
இயக்கம்: துரை
நடிப்பு: ரஜினி, விஜய குமார், சுமித்திரா



http://www.divshare.com/download/14776484-ac4


தங்க தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
தங்க தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்
தங்க தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்
தங்க தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்

ஆனந்தமா இல்லை பேரின்பமா
என்று அறியாமல் தடுமாறினாள்
ஆனந்தமா இல்லை பேரின்பமா
என்று அறியாமல் தடுமாறினாள்
அவன் அசையாமல் முகம் நோக்கினான்
இவள் ஆற்றாமல் நிலம் நோக்கினாள்
அவன் அசையாமல் முகம் நோக்கினான்
இவள் ஆற்றாமல் நிலம் நோக்கினாள்
தங்க தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்

பால்வண்ணமா இல்லை தேன் கிண்ணமா
என்று பாராட்டி நகையாடினான்
அவள் வேலாடும் விழி வீசினாள்
மன்னன் விளையாடும் களமாகினாள்
அவள் வேலாடும் விழி வீசினாள்
மன்னன் விளையாடும் களமாகினாள்
தங்க தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்

தாகங்களில் வரும் ராகங்களில்
முகம் செந்தூர கடலாகினாள்
தாகங்களில் வரும் ராகங்களில்
முகம் செந்தூர கடலாகினாள்
அவன் கடலாடும் படகாகினான்
இவள் உடல் ஆவி பொருளாகினாள்
அவன் கடலாடும் படகாகினான்
இவள் உடல் ஆவி பொருளாகினாள்

தங்க தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்

அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்
தங்க தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
இந்த ராஜாவும் தவமிருந்தான்

வெள்ளி, 6 மே, 2011

கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்..கடல் நீலம் என விழிக் கோலம் என்ன..

என்னைப் போன்ற ஒரு பாமரனுக்கு இந்த பாடல் ஒரு சிரமமான பாடலாகத்தான் தெரிகிறது. T M S, S ஜானகியும் நிச்சயமாக கொஞ்ச நேரம் சிரமப் பட்டுதான் பாடி இந்த அளவுக்கு ஒரு சிறப்பான பாடல் உருவாக்க உதவி இருக்கனும்.


திரைப் படம்: சிரித்து வாழ வேண்டும் (1974)
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: S S பாலன்
நடிப்பு:  M G R, லதா



http://www.divshare.com/download/14365969-eed

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்..
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்..
கடல் நீலம் என விழிக் கோலம் என்ன..
கடல் நீலம் என விழிக் கோலம் என்ன..
அந்த பார்வை எந்தன் மீதோ..
அந்த பார்வை எந்தன் மீதோ..
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்..
ஸ் ஸ் ஸ் ஸ் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...

கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்..
குளிர் தென்றல் என தொடும் பாவம் என்ன..
அந்த பார்வை எந்தன் மீதோ..
அந்த பார்வை எந்தன் மீதோ..
கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்..
ஸ் ஸ் ஸ் ஸ் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...

செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
செந்தேன் இதழ் நிறம் மாணிக்கமாக..
தந்திட வந்தேன் காணிக்கையாக..

காணிக்கை ஏது நான் தரும் போது...
காணிக்கை ஏது நான் தரும் போது...
கதாலின் சுவை ஏது நான் வழங்காது..
கொஞ்சும் நேரம் என்னை மறந்தேன்..
ஸ் ஸ் ஸ் ஸ் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...

நினைக்கையில் கொதிப்பாக அணைக்கையில் குளிராக..
நினைக்கையில் கொதிப்பாக அணைக்கையில் குளிராக..
இருப்பவள் இள மேனி என் நாளும் உனக்காக..
இருப்பவள் இள மேனி என் நாளும் உனக்காக..

ஆடவன் தொடும் நேரம் ஆசையில் உருவாகும்..
ஆடவன் தொடும் நேரம் ஆசையில் உருவாகும்..
நாடகம் அரங்கேறும் மேடையும் நீயாகும்..
நாடகம் அரங்கேறும் மேடையும் நீயாகும்..
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...

வான் மழை தரும் நீரை வாங்கிய நிலம் போலே...
நானொரு சுகம் காண நேர்ந்தது உன்னாலே..
மறப்பது ஒரு பாதி மறந்தது ஒரு பாதி..
மறப்பது ஒரு பாதி மறந்தது ஒரு பாதி..
எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி..
எடுப்பதும் கொடுப்பதும் நமக்கினி சரி பாதி..

கொஞ்ச நேரம் நம்மை மறந்தேன்..
குளிர் தென்றல் வர இடம் இல்லை என
ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம்...
ஒன்று சேர்ந்தே சுகம் காண்போம்...
கொஞ்ச நேரம் நம்மை மறந்தேன்..
ஸ் ஸ் ஸ் ஸ் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...

ஞாயிறு, 1 மே, 2011

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்

P. சுசீலா மற்றும் ஜெயசந்திரன் குரல்களில் ஒரு இனிமையான பாடல்


திரைப் படம்: நானே ராஜா நானே மந்திரி (1985)
இசை: இளையராஜா
இயக்கம்: பாலு ஆனந்த்
நடிப்பு: விஜயகாந்த், ஜீவிதா



http://www.divshare.com/download/14719888-f7b


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே...
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே..
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ..

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே...
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே..
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ..

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே...
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே

உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தம் ஆகலாம் - கொதித்திருக்கும்
கோடை காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
என்னாளும் தனிமையே எனது நிலைமையோ
தென்றல் கவிதையோ கதையோ
இரு கண்ணும் .. என் நெஞ்சும்..
இரு கண்ணும் நெஞ்சும் நீரில் ஆடுமோ...ஓ...

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே...
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே..
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ..

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே...
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே

ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழனும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயனும்
மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ - மணவரையில்
நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ
ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்
உந்தன் உறவுதான் உறவு...
அந்த நாளை.. எண்ணி நானும்..
அந்த நாளை எண்ணி நானும் வாடினேன்...

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே...
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே..
இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ..

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே...
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெற தவிக்குதே மனமே..