பின்பற்றுபவர்கள்

சனி, 31 ஆகஸ்ட், 2013

பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்

டி எம் எஸ், S ஜானகி இணைந்து பாடிய பாடல்கள் யாவும் ஏதாவது ஒரு விதத்தில் இனிமைதான். அதுவும்  K V மகாதேவன் இசையில் என்றால் இனிமைக்கு கேட்கவும் வேண்டுமா?


திரைப் படம்: செங்கமலத் தீவு (1962)
இயக்கம்: ராஜேந்திரன் (யார் இவர் ?)
குரல்கள்: டி எம் எஸ், S ஜானகி
பாடல்: ஏகலைவன் அல்லது திருச்சி தியாகராஜன்.
நடிப்பு: ஆனந்தன், ராஜஸ்ரீ
இசை: K V மகாதேவன்






ஹூ ஹூ ஹூம்
ஹா ஹா ஹா ஹா
ஹூம் ஹூம் ஹூம்
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்
பார்த்து சிரித்து மயங்கி நின்றேன்
பாடும் கதிரவன் பூமியில் கண்டேன்
பாவை நிலவாய் நின்றேன்
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்
ஆ ஆ ஆ ஆ ஆ
மலையில் அருவி பாய்ந்தோடும்
மதியை கண்ட கடல் பொங்கியெழும்
மலையில் அருவி பாய்ந்தோடும்
மதியை கண்ட கடல் பொங்கியெழும்
மங்கை உந்தன் முக மதிக் கண்டு
மனதில் இன்பம் பொங்கிடுதே
மனதில் இன்பம் பொங்கிடுதே
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்
மாமலையாகி நீங்கள் இருக்க
மங்கை அருவியாய் பாய்ந்திடுவேன்
மாமலையாகி நீங்கள் இருக்க
மங்கை அருவியாய் பாய்ந்திடுவேன்
அன்புக் கடலாய் நீங்கள் இருக்க
அமுதம் பொழியும் மதியாவேன்
அமுதம் பொழியும் மதியாவேன்
ஹா ஹா ஹா ஹா ஹா
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்
துன்பம் தீர்ந்தது வாழ்வினிலே
இன்பம் வந்தது மனம் போலே
மணமாலை நாளை
மகிழ்ந்திடுவோம்
ஹா ஹா ஹா ஹா ஹா
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்
பார்த்து சிரித்து மயங்கி நின்றேன்
பாடும் கதிரவன் பூமியில் கண்டேன்
பாவை நிலவாய் நின்றேன்
பகலில் பேசும் நிலவினைக் கண்டேன்

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

நெஞ்சு பொருக்குதில்லையே நெஞ்சு பொருக்குதில்லையே

இன்றைய இந்தியாவின் நிலைமையை பார்த்தால் இப்படித்தான் பாடத் தோன்றுகிறதோ? அன்றும் இப்படித்தான் இருந்தததால் இதை மீசை கவிஞன்  பாடினான். இன்றும் நமது நிலைமை இப்படித்தான் என்றால் நாம் வாங்கிய சுதந்திரத்திற்கு என்ன அர்த்தம் என்பது விளங்கவில்லை.
பின்னர் யார்தான் இந்த சுதந்திரத்தால் பயன் அடைந்தவர்கள்?

மிகக் கோபமாக பாரதியாரால் பாடப் பெற்ற இந்தப் பாடல் திரைப் படத்தில் சோகமாக இசைக்கப் படுகிறது. ஒரு வேளை சுதந்திரத்திற்கு பின் எடுக்கப் பட்ட படமானதால் அந்த உத்வேகம் குறைக்கப் பட்டதோ?
மற்றபடி  சரித்திரப் படங்களில் வரும் பாரதியாரின் கோபமானப்  பாடல் எல்லாமே (வீர பாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் ) அப்படியே கொண்டுவரப் பட்டதாக நான் எண்ணுகிறேன்.

திரைப் படம்: பராசக்தி (1952)
இயக்குனர்: R கிருஷ்ணன் S பஞ்சு
இசை: R சுதர்சனம்
நடிகர்கள்: சிவாஜி, பண்டரிபாய்
பாடல் ஆக்கம்: மகா கவி பாரதியார்
பாடியவர்: C S ஜெயராமன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xOTQ3MTIyMF9vMHYzRV9iMmMy/nenju%20porukkuthillaiye.mp3






நெஞ்சு பொருக்குதில்லையே
நெஞ்சு பொருக்குதில்லையே
நெஞ்சு பொருக்குதில்லையே
நெஞ்சு பொருக்குதில்லையே
இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்
நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்
நெஞ்சு பொருக்குதில்லையே
நெஞ்சு பொருக்குதில்லையே

அஞ்சி அஞ்சி சாவார்
இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே
அஞ்சி அஞ்சி சாவார்
இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே
வஞ்சனை பேய்கள் என்பார்
இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார்
வஞ்சனை பேய்கள் என்பார்
இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார்
துஞ்சுது முகட்டில் என்பார்
மிக துயர் படுவார்
எண்ணி பயப்படுவார்
ஆங்கோர்
நெஞ்சு பொருக்குதில்லையே
நெஞ்சு பொருக்குதில்லையே

கஞ்சி குடிப்பதற்கில்லான்
அதன் காரணங்கள் இவையெனும் அறிவும் இலான்
பஞ்சமோ பஞ்சம் என்றே
நிதம் பரிதவித்து
உயிர் துடிதுடித்து
கஞ்சி குடிப்பதற்கில்லான்
கஞ்சி குடிப்பதற்கில்லான்
அதன் காரணங்கள் இவையெனும் அறிவும் இலான்
பஞ்சமோ பஞ்சம் என்றே
பஞ்சமோ பஞ்சம் என்றே
நிதம் பரிதவித்து
உயிர் துடிதுடித்து
துஞ்சி மடிகின்றாரே
இவர் துயர்களை தீர்க்க ஓர் வழியுமில்லை
அங்கோர்
நெஞ்சு பொருக்குதில்லையே
நெஞ்சு பொருக்குதில்லையே 

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே

இயக்குனர் திரு S P முத்துராமனுக்கு முதல் படம். நடிகை ஜெயாவிற்கு இரெண்டாவது படமானாலும் இதுவே அவருக்கு தமிழ் திரை உலகில் ஒரு ஆரம்பம் ஆனது. 
P சுசீலா அம்மாவின் இனிமையான குரலில் மறக்க முடியாத பாடல்.
இசை ராஜு அவர்கள். தெலுங்கு டப்பிங் படங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்தவர். தமிழில் இந்தப் படத்துக்கும் ராணி யார் குழந்தை என்ற படத்திற்கும் மட்டுமே இசையமைத்திருக்கிறார்.

திரைப் படம்: கனிமுத்துப் பாப்பா (1972)
குரல்: P சுசீலா
பாடலாசிரியர்: பூவை செங்குட்டுவன் என்கிறது வல்லமை
இசை : ராஜு
நடிப்பு : முத்துராமன், ஜெயா
இயக்கம்: S P முத்துராமன்






ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே

ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
ஆனந்த நினைவுகள் அன்று கொண்ட உறவிலே
வசந்த காலத் தேரில் வந்து
வாழ்த்துக் கூறும் தென்றலே
வசந்த காலத் தேரில் வந்து
வாழ்த்துக் கூறும் தென்றலே

ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே

வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன்
வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன்
கோவிலைப் போலவே குடும்பத்தைப் போற்றுவேன்
மாலையிட்ட மன்னனோடு
மனம் நிறைந்து வாழுவேன்
மாலையிட்ட மன்னனோடு
மனம் நிறைந்து வாழுவேன்

ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட

இந்தப் படத்தில் பாடும் பெண் குரல் முழுவதும் பாம்பே ஜெயஸ்ரீயினுடையது. SPBயுடன் மற்றக் குரல் இணையும் போது அந்தப்  பாடல் தனி சுவை பெறுகிறது. இந்தப் பாடல் திரைப் படத்தில் இடம் பெறவில்லை என நினைக்கிறேன். நல்ல இனிமையான பாடல்.

திரைப் படம்: தம்பதிகள் (1983)
இசை: M S விஸ்வனாதன்
இயக்கம்: முக்தா V ஸ்ரீனிவாசன்
பாடல்: வாலி
குரல்கள்: S P B, பாம்பே ஜெயஸ்ரீ
நடிப்பு: ஜெய்ஷங்கர், சிவகுமார், பூர்ணிமா ஜெயராமன்


ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட
உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட
சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது
செந்தேன் பூவாக
சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது
செந்தேன் பூவாக

ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட
சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது
செந்தேன் பூவாக
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்ட

இவள் கேரளத்தில் காண வேண்டும் கார்த்திகை மண நாள்
இவள் மேனி வண்ணம் பாட வேண்டும் ஸ்வாதி திரு நாள்
இவள் கேரளத்தில் காண வேண்டும் கார்த்திகை மண நாள்
இவள் மேனி வண்ணம் பாட வேண்டும் ஸ்வாதி திரு நாள்
நாடு என்ன பாஷை என்ன நெஞ்சோடு நான் கொஞ்ச
நாடு என்ன பாஷை என்ன நெஞ்சோடு நான் கொஞ்ச
நாணம் என்ன கண்ணே தோள் மீது துஞ்ச
நாணம் என்ன கண்ணே தோள் மீது துஞ்ச
விரல் பட்டால் பொங்குது தொட்டால் துள்ளுது
எல்லாம் உன்னாலே
விரல் பட்டால் பொங்குது தொட்டால் துள்ளுது
எல்லாம் உன்னாலே

ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட

ஒரு ஓடமென்று நானும் நீந்த ஓடையும் நீயோ
வளை ஓசை மெல்ல கேட்க்கும்போது உருகிடுவாயோ
ஒரு ஓடமென்று நானும் நீந்த ஓடையும் நீயோ
வளை ஓசை மெல்ல கேட்க்கும்போது உருகிடுவாயோ
மோகமென்ன தாகமென்ன முந்தானை நீ போட
மோகமென்ன தாகமென்ன முந்தானை நீ போட
ஆசை என்னும் வெள்ளம் ஆறாக ஓட
ஆசை என்னும் வெள்ளம் ஆறாக ஓட
அடி கண்ணால் மந்திரம் சொன்னால் என் மனம்
பின்னால் வாராதோ
அடி கண்ணால் மந்திரம் சொன்னால் என் மனம்
பின்னால் வாராதோ

ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட
உலவும் குலவும் மனம் ஊஞ்சல் என்றே ஆட
சுகம் வந்தேன் என்றது தந்தேன் என்றது
செந்தேன் பூவாக
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்ட
ஒருவன் ஒருத்தி புது காதல் கொண்டாட

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

தேடும் என் காதல் பெண் பாவை சூடும் என் மார்பில்

மீண்டும் மறைந்த திரு சந்த்ரபோஸ் அவர்களின் இனிமைப்பாடல் ஒன்று. வாணி ஜெயராம் அவர்களின் கணீர் குரலில், முரளிக்கு ஏற்ற  T L தியாகராஜன் குரலும் இணைந்து இங்கு பளபளக்கின்றது.
பாடல் காட்சியோ இளமை இளமை இளமைதான்.


ஒரு மலரின் பயணம் (1985)
நடிப்பு: லக்ஷ்மி, முரளி, ஊர்வசி
இயக்கம்: முக்தா V ஸ்ரீனிவாசன்
குரல்கள்: T L தியாகராஜன் , வாணி ஜெயராம்
இசை: மறைந்த திரு சந்த்ரபோஸ்

http://asoktamil.opendrive.com/files/Nl8xOTI5MDYzMV9Sa0dQMF9kYWM2/Thedum%20En%20Kadhal-Oru%20Malarin%20Payanam.mp3





தேடும் என் காதல் பெண் பாவை
சூடும் என் மார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர் மேடை கனி தாங்குமோ
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ

தேடும் உன் காதல் பெண் பாவை
சூடும் உன் மார்பில் பொன் மாலை
காதோரமே உன் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர் மேடை கனி தாங்குமே
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமே

தேடும் என் காதல் பெண் பாவை

கோவில் இங்கு தேவன்
எங்கள் இரவும் ஏங்கும் நேரம்
கோவில் இங்கு தேவி
எங்கள் இரவும் ஏங்கும் நேரம்
மனதின் வாசல் விழிகளாகும்
இதயம் காதல் பதியம் போடும்
பாடம் கேட்கும் பருவமே

தேடும் உன் காதல் பெண் பாவை
சூடும் உன் மார்பில் பொன் மாலை
காதோரமே உன் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர் மேடை கனி தாங்குமே
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமே
தேடும் என் காதல் பெண் பாவை

மோகம் வந்து மோதும்
வெள்ளம் கரைகள் மீறிப் போகும்
மோகம் வந்து மோதும்
வெள்ளம் கரைகள் மீறிப் போகும்
கடலில் சேரும் நதியின் பாதம்
மனதில் சூடும் உனது வேதம்
வேகம் மோகம் நினைவிலே

தேடும் என் காதல் பெண் பாவை
சூடும் என் மார்பில் பொன் மாலை
காதோரமே என் கீதாஞ்சலி
பனி தாங்கும் மலர் மேடை கனி தாங்குமோ
இது மேலாடை கொடியேற்றும் அரசாங்கமோ

தேடும் உன் காதல் பெண் பாவை
சூடும் உன் மார்பில் பொன் மாலை