பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே

இயக்குனர் திரு S P முத்துராமனுக்கு முதல் படம். நடிகை ஜெயாவிற்கு இரெண்டாவது படமானாலும் இதுவே அவருக்கு தமிழ் திரை உலகில் ஒரு ஆரம்பம் ஆனது. 
P சுசீலா அம்மாவின் இனிமையான குரலில் மறக்க முடியாத பாடல்.
இசை ராஜு அவர்கள். தெலுங்கு டப்பிங் படங்களுக்கு இசையமைத்து கொண்டிருந்தவர். தமிழில் இந்தப் படத்துக்கும் ராணி யார் குழந்தை என்ற படத்திற்கும் மட்டுமே இசையமைத்திருக்கிறார்.

திரைப் படம்: கனிமுத்துப் பாப்பா (1972)
குரல்: P சுசீலா
பாடலாசிரியர்: பூவை செங்குட்டுவன் என்கிறது வல்லமை
இசை : ராஜு
நடிப்பு : முத்துராமன், ஜெயா
இயக்கம்: S P முத்துராமன்






ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே

ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே
ஆனந்த நினைவுகள் அன்று கொண்ட உறவிலே
வசந்த காலத் தேரில் வந்து
வாழ்த்துக் கூறும் தென்றலே
வசந்த காலத் தேரில் வந்து
வாழ்த்துக் கூறும் தென்றலே

ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே

வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன்
வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன்
கோவிலைப் போலவே குடும்பத்தைப் போற்றுவேன்
மாலையிட்ட மன்னனோடு
மனம் நிறைந்து வாழுவேன்
மாலையிட்ட மன்னனோடு
மனம் நிறைந்து வாழுவேன்

ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல். மிகவும் ரசித்து கேட்டேன். நன்றி.

கருத்துரையிடுக