பின்பற்றுபவர்கள்

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே

இது போல ஒரு பாடல் மீண்டும் இல்லை. பாடும் குரல்களில் கம்பீரமும், பெண் குரலில் ஒரு காதலும். நீண்ட நாள் கழித்து ஜிக்கியின் இனிமை குரலில் ரசிக்கும் படியான பாடல்.

திரைப் படம்: மதுரை வீரன் (1965)
இயக்கம்: D யோகானந்த்
இசை: G ராமநாதன்
பாடியோர்: டி  எம் எஸ், ஜிக்கி
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: எம் ஜி யார், பத்மினி.

http://asoktamil.opendrive.com/files/Nl8xODUwNzIxOF84enFlWV8zOTJj/Naadagamellam%20Kanden-Madhurai%20Veeran.mp3

நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே
நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே
தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா
தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே
கண்ணா வாழ்விலே உங்கள் அன்பால் நேரிலே
கனா வாழ்விலே உங்கள் அன்பால் நேரிலே
தேடிய இன்பம் கண்டேன் இன்று கண்ணா வாழ்விலே
கன்னி பருவம் எனும் கட்டழகு தேரினிலே
ஆ ஆ ஆ ஆ
என்னையே ஆள்கொள்ள இசைந்து வந்த மணவாளா
ஆ ஆ ஆ ஆ
அன்னம் நடை பயில அசைந்து வரும் பூங்கொடியே
ஆ ஆ ஆ ஆ
அன்னம் நடை பயில அசைந்து வரும் பூங்கொடியே
ஆ ஆ ஆ ஆ
உன்னழகை பார்த்திருக்கும்
உன்னழகை பார்த்திருக்கும்
என்னாளும் திரு நாளே
அலை பாயும் தென்றலாலே சிலை மேனி கொஞ்சாதே
அலை பாயும் தென்றலாலே சிலை மேனி கொஞ்சாதே
கலை மாதை கண்டதாலே நிலை மாரி கெஞ்சுதே
கலை மாதை கண்டதாலே நிலை மாரி கெஞ்சுதே

வளர் காதல் அன்பினாலே வரும் வார்த்தை கொஞ்சமா
வளர் காதல் அன்பினாலே வரும் வார்த்தை கொஞ்சமா
மலர் போன்ற உன்னை கண்டால் கவி பாட பஞ்சமா
மலர் போன்ற உன்னை கண்டால் கவி பாட பஞ்சமா
ஈருடல் ஓருயிர் ஆனோம் இன்பம் காண்போம் வாழ்விலே
ஈருடல் ஓருயிர் ஆனோம் இன்பம் காண்போம் வாழ்விலே
காண்போம் வாழ்விலே பேரன்பால் நேரிலே
காண்போம் வாழ்விலே பேரன்பால் நேரிலே
ஈருடல் ஓருயிர் ஆனோம் இன்பம் காண்போம் வாழ்விலே

2 கருத்துகள்:

Raashid Ahamed சொன்னது…

டிஎம்எஸ் பாடிய பாடல்களில் சில பாடல்களை கேட்கும் போது இனம் புரியாத பரவசம், குதூகலம் தோன்றும் அதில் ஒரு பாடல் தான் இது. இதற்கு காரணம் பாடல் வரிகளா பாடிய விதமா இசை அமைப்பா ? அல்லது எல்லாமுமா ? இந்த பாடல் கூட தங்களை தொகுப்பில் தாமதமாக இடம் பிடித்துள்ளது.

Priya சொன்னது…

Mikavum Arumai

கருத்துரையிடுக