பின்பற்றுபவர்கள்

புதன், 18 மே, 2011

ஒரு தேவதை வந்தது..

அழகானப் பாடல். பெண்குரலில் ஆஷா போன்ஸ்லேக்கு பதிலாக வேறு யாராவது நன்றாக தமிழ் தெரிந்தவர் பாடி இருந்தால் பாடல் இன்னும் அழகாக இருந்திருக்கலாம். இசையின் ஆதிக்கம் அதிகமில்லாமல் மென்மையாக பாடப் பட்ட ஒரு பாடல். இந்த படம் தெலுங்கு டப்பிங்காக இருக்கலாம் என நினைக்கிறேன்.


திரைப் படம்: நான் சொன்னதே சட்டம் (1988)
இசை: இளையராஜா
நடிப்பு: சரண் ராஜ், ரேகா
குரல்கள்: SPB, ஆஷா போன்ஸ்லே



http://www.divshare.com/download/14855879-80a











ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஒரு தேவதை வந்தது..
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது..
அழகிய தேவதை வந்தது..
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது..
என் மனதில் சோகங்கள் தீர..
அதில் இனிமை என்றென்றும் சேர..

பல புதிய ராகங்கள் பாட..
அதில் இனிய நாதங்கள் கூட..
அழகிய தேவதை வந்தது..
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது..

காட்டினில் பூவாசம் காற்றோடு போகும்..
ஏட்டினில் எழுதாது கவி போலே..
கடலினில் மழை நீரும் வீணாதல் போலே..
உலகினில் வீணாக இருந்தேனே..
வந்திடும் காலங்கள் மூடிய அறைதன்னில்..
பொன் விளக்கும் ஏற்ற இருள் அங்கு விலகாதோ..

நான் செய்த பாவங்கள் தீராத ஒன்று..
நீ வந்து தீர்த்தாயே என் தேவி இன்று..
அன்பே என் நன்றி என் சொல்வேன்..

ஒரு தேவதை வந்தது..
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது..
அழகிய தேவதை வந்தது..
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது..

சந்திர ஊர்கோலம் கண்டேன் மண்மீது..
பெண் உந்தன் முக நிலவு விண் மேலே..
பெண் என்னை நிலவாக பார்க்கின்ற நெஞ்சம்..
உண்மையை உணராது மண் மேலே..
காதலில் உளராத காளையும் இங்கேது..
கன்னியைச் சேராத வாழ்வினில் நிறைவேது..
நீ சொல்லும் வேதங்கள் புதிதல்ல அன்பே..
என்றாலும் புதிதாக கண்டேனே இங்கே..
மாறாது மாறாது என் அன்பே..

ஒரு தேவதை வந்தது..
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது..
பல புதிய ராகங்கள் பாட..
அதில் இனிய நாதங்கள் கூட..
என் மனதில் சோகங்கள் தீர..
அதில் இனிமை என்றென்றும் சேர..
ஒரு தேவதை வந்தது..
ஆ ஆ ஆ ..
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது..
ஆ ஆ ஆ ..
தேவதை வந்தது..
ஆ ஆ ..
மனச் சிறை கூண்டை திறந்து சென்றது..
ஆ ஆ ஆ ஆ..

2 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

நல்ல பாடல். கேட்க இனிமையாக இருக்கும். இது டப்பிங் படமல்ல. நேரடி தமிழ் படம் தான்.

பனித்துளி சங்கர் சொன்னது…

தேடியும் கிடைக்காத பல இனிமையானப் பாடல்களைப் பகிர்ந்து வருகிறீர்கள் நன்றி

கருத்துரையிடுக