பின்பற்றுபவர்கள்

புதன், 8 ஜூன், 2011

என் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு..உன் அன்னை முகம் தெரிகிறதா உனக்கு..

ஜானகி அம்மாவின் இனிமையான குரலில் ஒரு வித்தியாசமான தாலாட்டு பாடல். அபூர்வமான பாடலும் கூட.. பெற்ற மகனை தவற விட்ட ஒரு தாய் பாடுவது போலுள்ளது.


திரைப் படம்: கல்யாண மண்டபம்

பாடும் குரல் : S ஜானகி

இசை: M R பார்த்தசாரதி

நடிப்பு: C L ஆனந்தன், K R விஜயா

இயக்கம்: மல்லியம் ராஜகோபால்




http://www.divshare.com/download/15048931-53a




என் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு..

உன் அன்னை முகம் தெரிகிறதா உனக்கு..

உன் மழலை மொழி புரிகிறது எனக்கு..

என் பகலை மொழி புரிகிறதா உனக்கு..

ஆராரோ ஆராரோ..ஆராரோ ஆராரோ..



முன்பு நான் தவமிருந்தேன் முன்னூறு நாள் சுமந்தேன்..

பின்பு உன்னை நான் அடைதேன் நான் அடைந்தேன்..

அன்பு மகன் ஓரிடத்தில் அன்னை மட்டும் வேறிடத்தில்..

கோடி துண்பம் நான் அடைந்தேன் ஏன் அடைந்தேன்..

ஆராரோ ஆராரோ..ஆராரோ ஆராரோ..



என் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு..

உன் அன்னை முகம் தெரிகிறதா உனக்கு..

உன் மழலை மொழி புரிகிறது எனக்கு..

என் பகலை மொழி புரிகிறதா உனக்கு..

ஆராரோ ஆராரோ..ஆராரோ ஆராரோ..



தங்கத்தால் கோவில் கட்டி வண்ணத்தால் வாச்ல் வைத்தே..

தெய்வத்தை நான் அடைந்தேன் நான் அடைந்தேன்..

கோவில் மட்டும் ஓரிடத்தில்..

தெய்வம் மட்டும் வேறிடத்தில்..

கோடி துண்பம் நான் அடைந்தேன் ஏன் அடைந்தேன்..

ஆராரோ ஆராரோ..ஆராரோ ஆராரோ..



என் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு..

உன் அன்னை முகம் தெரிகிறதா உனக்கு..

உன் மழலை மொழி புரிகிறது எனக்கு..

என் பகலை மொழி புரிகிறதா உனக்கு..

ஆராரோ ஆராரோ..ஆராரோ ஆராரோ..

ஆராரோ ஆராரோ..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக