பின்பற்றுபவர்கள்

சனி, 18 ஜூன், 2011

உள்ளத்தின் உள்ளே உள்ளதென்ன..அந்த உண்மையை சொல்லாயோ..

இளமை ததும்பும் இளம் காதலர்களின் மொழியில் ஒரு அழகான பாடல்.
ஆண் குரலின் வேகமும் பெண் குரலின் மென்மையும் நன்று.

திரைப் படம்: பொன்னான வாழ்வு (1967)
இசை: K V மகாதேவன்
பாடும் குரல்கள்: T M S, P சுசீலா
இயக்கம்: தேவன்
தயாரிப்பு: V K ராமசாமி
நடிப்பு: ஜெயஷங்கர், K R விஜயா



http://www.divshare.com/download/15019317-12a

உள்ளத்தின் உள்ளே உள்ளதென்ன..

அந்த உண்மையை சொல்லாயோ...

சொல்லத்தான் வந்தேன்..ம்ம் ம்ம்..

அதை எப்படி சொல்லுவதோ...

உள்ளத்தின் உள்ளே உள்ளதென்ன..

அந்த உண்மையை சொல்லாயோ...

மலையருவி குன்றின் மீது மத்தளம் கொட்டுவதேன்...

நதியழகி வளைந்து நெளிந்து நடனம் ஆடவே...

மலையருவி குன்றின் மீது மத்தளம் கொட்டுவதேன்...

நதியழகி வளைந்து நெளிந்து நடனம் ஆடவே...

அலைகள் எழுந்து கரையின் மீது கைகளை தட்டுவதேன்...

அலைகள் எழுந்து கரையின் மீது கைகளை தட்டுவதேன்...

மலர்கள் மலர்ந்து கனிகள் குலுங்கி மனமும் மகிழவே...

உள்ளத்தின் உள்ளே உள்ளதென்ன அந்த உண்மையை சொல்லாயோ...

பருவ அழகை மூடி மறைத்து வாட்டுவதேனோ...

பாவை எனது இளமை உணர்வை மீட்டுவதேனோ...

இதயம் தன்னை இழந்துவிட்டேன் உன்னிடம் நானே...

இந்த உலகை மறந்துவிட்டேன் என்னிடம் ஏது...

உள்ளத்தின் உள்ளே உள்ளதென்ன..

அந்த உண்மையை சொல்லாயோ...

தென்றல் தழுவ இதழ் விரிந்தது தேன் மலராக..

மணமன்றத்திலே காத்திருப்பேன் நான் உனக்காக...

ஹா ஹா,,

தென்றல் தழுவ இதழ் விரிந்தது தேன் மலராக..

மணமன்றத்திலே காத்திருப்பேன் நான் உனக்காக...

அருகினிலே வந்துவிடு நீ மெதுவாக....

அருகினிலே வந்துவிடு நீ மெதுவாக....

ஆசை வெட்கம் பார்ப்பதில்லையே பொதுவாக...

உள்ளத்தின் உள்ளே உள்ளதென்ன..

அந்த உண்மையை சொல்லாயோ...

சொல்லத்தான் வந்தேன்.. ம்ம் ம்ம்..

அதை எப்படி சொல்லுவதோ...

ல ல ல ல ல ல ல ல ல ல..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக