பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 28 ஜூன், 2011

மழை தருமோ என் மேகம்..

திரு ஷியாம் இசையிலும் S P B அவர்களின் குரலிலும் இன்னுமொரு நல்ல இனிமையான பாடல்.  இது மழைக் காலமோ!!!


திரைப் படம்: மனிதரில் இத்தனை நிறங்களா (1978)
நடிப்பு: கமல், ஸ்ரீதேவி
இயக்கம்: R C சக்தி
பாடல்: கண்ணதாசன்









ஆ ஆ ஆ ஆ ஆ ஹா ஹா ஹா


மழை தருமோ என் மேகம்

மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்

தோகைக்கு தூதுவன் யாரோ

தோள் தொட்ட தென்றலடி

தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன

பொன்வண்டே

மழை தருமோ என் மேகம்

மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்

தோகைக்கு தூதுவன் யாரோ

தோள் தொட்ட தென்றலடி

தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன

பொன்வண்டே.

ஆ ஹ ஹா ஹோ ஹோ ஹோ ம் ம் ம் ம்

தேனிருக்கும் வண்ண மலர் நீராடுது

தேனீயில் ஒன்று இங்கு போராடுது

தேனிருக்கும் வண்ண மலர் நீராடுது

தேனீயில் ஒன்று இங்கு போராடுது

அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்த கோலம்

தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்

தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்



தளிரே நீ அன்னப்பேடு எண்ணம் மாறுமா

மழை தருமோ என் மேகம்

மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்

தோகைக்கு தூதுவன் யாரோ

தோள் தொட்ட தென்றலடி

தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன

பொன்வண்டே

ஆ ஹ ஹா ஹோ ஹோ ஹோ ம் ம் ம் ம்

கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்

காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்.

கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்

காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்.

சிரிக்கின்ற தங்க சிற்பம் தேரில் வராதோ

சிலை வண்ணம் அங்கே

கலை உள்ளம் இங்கே

நிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே

இளைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா

மழை தருமோ என் மேகம்

மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்

தோகைக்கு தூதுவன் யாரோ

தோள் தொட்ட தென்றலடி

தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன

பொன்வண்டே

ஆ ஹ ஹா ம் ம் ம் ம்

1 கருத்து:

Raashid Ahamed சொன்னது…

இந்த பாடலை கேட்கும் போது விவரிக்க முடியாத ஒரு உணர்வு தோன்றுகிறது. சிறுவயதில் நான் கேட்ட பாடல். எஸ்பிபி அவர்கள் ஒரு புது மாதிரியாக இப்பாடலை பாடியுள்ளார்.

கருத்துரையிடுக