பின்பற்றுபவர்கள்

வியாழன், 18 ஏப்ரல், 2013

காதலன் வந்தான் கண் வழி சென்றான்

மறைந்த இசையமைப்பாளர் திரு T K அவர்களின் நினைவாக அவர் தனித்து இசையமைத்த மூன்றெழுத்து திரைப் படத்திலிருந்து ஒரு அருமையானப் பாடல்.
S V பொன்னுசாமியின் ஹம்மிங் குரலோடு ஈடுஇணையில்லாத P சுசீலா அம்மாவின் தேன் மதுரக் குரலில், இசையமைப்பாளர் என்றும் நம் நெஞ்சில் நிற்கிறார்.

திரைப்படம்:   மூன்றெழுத்து  (1967)
பாடகர்கள்:    P சுசீலா, S V பொன்னுசாமி
இசை:     T K ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர்:     தெரியவில்லை
நடிப்பு: ரவிச்சந்திரன், ஜெயலலிதா
இயக்கம்: T R ராமண்ணா

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDg3MTY1N19WdTBGZF8zZDg2/kadalan%20vanthan.mp3





காதலன் வந்தான்
கண் வழி சென்றான்
கண்களை மூடு
பைங்கிளியே பைங்கிளியே

ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ம் ஹும்

வெளியில் விடாமல் சிறையினில் வைத்து
ரகசியம் பேசு பைங்கிளியே

ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ம் ஹும்

காதலன் வந்தான்
கண் வழி சென்றான்
கண்களை மூடு
பைங்க்கிளியே பைங்கிளியே

குளிர்ந்த பாலை பருகி விடு
அவன் குளிக்கட்டுமே
அதில் குளிக்கட்டுமே

ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ம் ஹும்

குளிர்ந்த பாலை பருகி விடு
அவன் குளிக்கட்டுமே
அதில் குளிக்கட்டுமே

ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ம் ஹும்

குளிர்ந்த பாலை பருகி விடு
அவன் குளிக்கட்டுமே
அதில் குளிக்கட்டுமே

குளித்த பின்னாலே
இதழோரம் நடக்கட்டுமே
கொஞ்சம் கொடுக்கட்டுமே

காதலன் வந்தான்
கண் வழி சென்றான்
கண்களை மூடு
பைங்கிளியே பைங்கிளியே

தூங்குகின்றானா பார்த்து விடு
நீ தாலாட்டு
மெல்ல தாலாட்டு

ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ம் ஹும்

தூங்குகின்றானா பார்த்து விடு
நீ தாலாட்டு
மெல்ல தாலாட்டு

ஏங்குகின்றானா கேட்டு விடு
நீ தேனூட்டு
இன்ப தேனூட்டு

காதலன் வந்தான்
கண் வழி சென்றான்
கண்களை மூடு
பைங்கிளியே
பைங்கிளியே

ம் ஹும் ம்  ஹும் ம் ஹும் ம் ஹும்
ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ம் ஹும்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசிக்க வைக்கும் பாடல்... நன்றி...

அப்பாதுரை சொன்னது…

TKR மறைந்துவிட்டாரா!
ச்ச்.. நீங்கள் மட்டும் தான் இதைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள் போல.. சிறிய மனமார்ந்த அஞ்சலி சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள்.

கருத்துரையிடுக