பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

காதல் கடல் கரையோரமே என் கண்ணே

சிதம்பரம் சுந்தரம் பிள்ளை ஜெயராமன் ஒரு நல்ல பாடகர், நடிகர் மற்றும் இசையமைப்பாளர். அந்தக் காலத்தில் ஒரே ஒரு திறமையை மட்டும் வளர்த்துகொண்டு பிரபலம் அடைந்தவர்கள் குறைவு. உதாரணம் சிவாஜி கணேசன்.
எம் ஜி யார் நடிப்பு+அரசியல், கமல் நடிப்பு+நடனம் இப்படி பலர்.

இன்று சாமானியர்களாகிய  நாம் மட்டுமே multi task or multicraft என அந்த பழைய முறைகளை பின்பற்றி வருகிறோம். அது நமது பிழைப்புக்காக.
நமது அரசியல் வாதிகளுக்கு அந்த தொந்திரவே இல்லை. ஒரே திறமை மக்களை ஏமாற்ற தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவு தான். ஓகே இங்கே எதற்கு அரசியல்.

நல்லதொரு பாடலை கேட்போம்.
இதுவும் இரண்டு பொண்டாட்டி காரன் (!) கதைதான் போலிருக்கிறது.
படத்திற்கு கதை, வசனம்: மு கருணாநிதி. இது அவருடைய சொந்த படம் (மேகலா பிச்சர்ஸ்)

எது எப்படியோ பாடல் அருமை.

திரைப்படம்: குறவஞ்சி (1960)
இசை:T R பாப்பா
பாடியவர்கள்: C S ஜயராமன், P லீலா, ஜமுனா ராணி
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி, மைனாவதி
இயக்கம்: A காசிலிங்கம்


http://asoktamil.opendrive.com/files/Nl8xMDkxOTU1MF9WZExhal9kZmYz/KAATHAL%20KADAL%20KARAIYORAMEY%20SSKFILM015%20CSJPLPS%20@%20KURAVANJI[128].mp3





காதல் கடல் கரையோரமே என் கண்ணே
காதல் கடல் கரையோரமே என் கண்ணே
காத்திருந்து நானே
தவம் புரிந்தேனே
காத்திருந்து நானே
தவம் புரிந்தேனே
காதல் கடல்
இன்பமே
காதல் கடல்
என்றுமே காதல் கடல் கரையோரமே

ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ

காதல் கடல் கரையோரமே என் கண்ணே
காதல் கடல் கரையோரமே என் கண்ணே
காத்திருந்து நானே
தவம் புரிந்தேனே
காத்திருந்து நானே
தவம் புரிந்தேனே
காதல் கடல் கரையோரமே

நித்தம் உன் காலடியை தேடி விளையாடி வந்து
முத்தம் இடும் அலையாய் நான் மாறிடுவேனே
நித்தமும் உன் காலடியை தேடி விளையாடி வந்து
முத்தம் இடும் அலையாய் நான் மாறிடுவேனே

ஏ ஏ ஏ ஏ ஏ ஏ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ


நித்தமும் உன் காலடியை தேடி விளையாடி வந்து
முத்தம் இடும் அலையாய் நான் வாழ்ந்திருந்தேனே

ஏ ஏ ஏ ஏ ஏ ஏ


நித்தமும் உன் காலடியை தேடி விளையாடி வந்து
முத்தம் இடும் அலையாய் நான் வாழ்ந்திருந்தேனே

 ஆ  ஆ ஆ ஆ

முத்தமிடும் அலையால் நான் முத்தாகவே மாறி
முத்தமிடும் அலையால் நான் முத்தாகவே மாறி
முழு மதிபோலே வீசிடுவேனே
ஒளி வீசிடுவேனே

காதல் கடல்
இன்பமே
காதல் கடல்
என்றுமே
காதல் கடல் கரையோரமே
கண்ணே
காத்திருந்து நாமே
தவம் புரிந்தோமே
காத்திருந்து நாமே
தவம் புரிந்தோமே
காதல் கடல் கரையோரமே
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

என்றோ கேட்ட பாடல்... மறந்தே விட்டது... நன்றி சார்...

Raashid Ahamed சொன்னது…

சிறு வயதில் என் பெற்றோர் C.S.ஜெயராமன் பாடலை கேட்கும் போது என்ன இது கிழவன் பாடலை கேக்குறீங்க என கிண்டலடித்து நினைவிருக்கிறது. சம்பூர்ண ராமாயணம் படத்தில் ”சங்கீத சௌபாக்யமே” என்ற இவர் பாடலை கேட்ட போதுதான் இவர் எப்படிப்பட்ட இசைவாணர் என்று புரிந்தது. எப்படியானாலும் நடிகர் திலகத்துக்கு இவர் குரல் பொருத்தமில்லை என்பது உண்மை.

கருத்துரையிடுக