பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா

மறைந்த மலேசிய வாசுதேவன் அவர்களும் நல்ல பாடகர், இசையமைப்பாளர், நடிகர். ஆனால் எதிலும் தமிழ் திரை உலகின் சூட்சமம் தெரியாததால் முழு வெற்றி பெறமுடியாமல் போனவர்.
வித்தியாசமான ஒரு காலகட்டத்தில் அமைதியான வகையில் ஒரு அட்டகாசமான பாடலை வழங்கியிருந்தார் இசை ஞானி.
கண்ணை மூடிக் கொண்டு அனுபவிக்க வேண்டிய பாடல்.


திரைப் படம்: நண்டு (1981)
இசை: இளையராஜா
பாடியவர்: மறைந்த மலேசிய வாசுதேவன்
பாடல்: வைரமுத்து என்று நினைக்கிறேன்.
இயக்கம்: J மகேந்திரன்
நடிப்பு: சுரேஷ், அஷ்வினி
எழுதியவர்: P B ஸ்ரீனிவாஸ் அல்லது கங்கை அமரன்???

http://asoktamil.opendrive.com/files/Nl8xMTI1NTk5NF9idlFLcl82NmEz/AlliThandhaBhoomi.mp3





ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ஹூ ஹூ ஹூ ஹூ ஹூம் ஹூம் ஹூம் ஹூம்
அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா

சேவை செய்த காற்றே பேசாயோ
ஷேமங்கள் லாபங்கள் யாதோ
பள்ளி சென்ற காலப் பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆகா
புரண்டு ஓடும் நதி மகள்
இரண்டு கரையும் கவிதைகள்
தனித்த காலம் வளர்த்த இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா

காவல் செய்த கோட்டை காணாயோ
கண்களின் சீதனம் தானோ
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே
காரணம் ஆதனம் தேனோ
விரியும் பூக்கள் பாலங்கள்
விசிறியாகும் நானல்கள்
மரத்தின் வேரும் மகிழ்ச்சிப் படுக்கையே
பழைய சோகம் இனியும் இல்லை

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்
ஹூ ஹூம் ஹூ ஹூம் ஹூ ஹு ஹூம் ஹூம் ம்ம்ம்.

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பலமுறை மனதில் பாடும் பாடல்... நன்றி சார்...

Raashid Ahamed சொன்னது…

மலேசியா வாசுதேவன் ஒரு மகத்தான திரைப்பாடகர். இவர் ஒரு பிறவி மேதை. எப்போதும் கம்பீரமான குரலில் பாடும் இவர் இந்த பாடலை பாடியிருக்கும் விதம் ஆச்சர்ய பட வைக்கும். ஆனால் இந்த பாடலை எழுதியவர் P.B.ஸ்ரீனிவாஸோ என ஒரு குண்டை போடுகிறீர்கள். அவர் எப்போ பாட்டெழுத கிளம்பினார்.?

பெயரில்லா சொன்னது…

திகட்டாத பாடல்

Ram சொன்னது…

பாடல்: மதுக்கூர் கண்ணன் also known as இயக்குநர் ‘யார்’ கண்ணன்

கருத்துரையிடுக