பின்பற்றுபவர்கள்

வியாழன், 27 ஜூன், 2013

நீல வண்ண கண்ணா வாடா

அருமையான தாலாட்டு பாடல். படமாக்கி இருக்கும் விதம் அழகு. மனசு குளிர ஒரு பாடல். மென்மையான தாலாட்டு.

திரைப் படம்: மங்கையர் திலகம் (1955)
இசை: S தக்ஷிணாமூர்த்தி
பாடியவர்கள்: R பாலசரஸ்வதி
பாடல் வரிகள்: மருதகாசி
இயக்கம்: L V பிரசாத்
நடிப்பு: சிவாஜி, பத்மினி

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDczMzc2NV9hSDJWcF8wNjFk/Neela%20Vanna%20Kanna[128].mp3





நீல வண்ண கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா
நீல வண்ண கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா வாடா
நீல வண்ண கண்ணா வாடா

பிள்ளையில்லா கலியும் தீர
வள்ளல் உந்தன் வடிவில் வந்தான்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ  ஆ ஆ ஆ ஆ

பிள்ளையில்லா கலியும் தீர
வள்ளல் உந்தன் வடிவில் வந்தான்

எல்லை இல்லா கருணை தன்னை
என்னவென்று சொல்வேனப்பா
என்னவென்று சொல்வேனப்பா

நீல வண்ண கண்ணா வாடா

வானம்பாடி கானம் கேட்டு
வசந்த கால தென்றல் காற்றில்
வானம்ப்பாடி கானம் கேட்டு
வசந்த கால தென்றல் காற்றில்

தேன் மலர்கள் சிரிக்கும் ஆட்சி
செல்வன் துயில் நீங்கும் காட்சி
செல்வன் துயில் நீங்கும் காட்சி

நீல வண்ண கண்ணா வாடா

தங்க நிறம் உந்தன் அங்கம்
அன்பு முகம் சந்திர பிம்பம்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

தங்க நிறம் உந்தன் அங்கம்
அன்பு முகம் சந்திர பிம்பம்

கண்ணால் உன்னை கண்டால் போதும்
கவலை எல்லாம் பறந்தே போகும்
கண்ணால் உன்னை கண்டால் போதும்
கவலை எல்லாம் பறந்தே போகும்

சின்னஞ்சிறு திலகம் வைத்து
சிங்காரமாய் புருவம் தீட்டி
சின்னஞ்சிறு திலகம் வைத்து
சிங்காரமாய் புருவம் தீட்டி

பொன்னாலான நகையும் பூட்ட
கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு
நீல வண்ண கண்ணா வாட

நடுங்க செய்யும் வாடை காற்றே
ஞாயமில்லை உந்தன் செய்கை
தடை செய்வேன் தாளை போட்டு
முடிந்தால் உன் திறமை காட்டு

விண்ணில் நான் இருக்கும் போது
மண்ணில் ஒரு சந்திரன் ஏது
அம்மா என்ன புதுமை என்றே
கேட்கும் மதியை பாரு

இன்ப வாழ்வின் பிம்பம் நீயே
இணையில்லா செல்வம் நீயே
பொங்கும் அன்பின் ஜோதி நீயே
புகழ் மேவி வாழ்வாய் நீயே

நீல வண்ண கண்ணா வாடா

3 கருத்துகள்:

NAGARAJAN சொன்னது…

மிகவும் அருமையான பாட்டு.


மருதகாசி எழுதிய பிற தாலாட்டுப் பாடல்கள்:


தந்தை யாரோ தாயும் யாரோ - யார் பையன்

எஜமான் பெற்ற செல்வமே - அள்ளி பெற்ற செல்வம்

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா - வண்ணக்கிளி

நீ சிரித்தால் நான் சிரிப்பேன் - பாவை விளக்கு

சின்ன சின்ன ரோஜா - அழகு நிலா

தாயாகி வச்ச என் தங்கமே - ரௌடி ராக்கம்மா

சின்ன அரும்பு மலரும் - பங்காளிகள்

(சில விட்டுப் போயிருக்கலாம்)


நான் அறிந்த வரையில், தமிழ்ப் படங்களில் தாலாட்டுப் பாடல்களில் தனித் தன்மையோடு தெரிபவர் மருதகாசி

Unknown சொன்னது…

விபரங்களுக்கு நன்றி திரு நாகராஜன். எங்கே ரொம்பா நாளா உங்களைக் காணோம்?
நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களில் சில ஏற்கனவே நமது முந்தைய பதிவுகளில் இடம்பெற்றிருக்கின்றன. மற்ற பாடல்களும் கிடைத்தால் விரைவில் தர முயற்சிக்கிறேன். நன்றி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தாலாட்டும் அழகான அருமையான பாடல்... நன்றி சார்...

கருத்துரையிடுக