பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 7 ஜூன், 2013

தித்திக்கும் முத்தமிழே கவிதை சீதனம் தரும்


அழகான தமிழிலில் டி எம் எஸ் ஸும், சுசீலா அம்மாவும் இனிமையாக வழங்கியுள்ளனர்.

இலக்கண தமிழிலில் அமைந்த இந்தப் பாடலில் இடையில் சில்லென என்று ஒரு வார்த்தை வருகிறதே?  அது தமிழ் வார்த்தையா? Chill என்பதற்கான உரு என நினைக்கிறேன்.

இந்தப் பாடல் நீண்ட காலத்துக்கு முன் திரு தமிழன்பன் விரும்பிக்கேட்டிருந்தார். இப்போதுதான் கிடைத்தது. அதற்குள் அவருக்கு இந்தப் பாட்லும் கிடைத்திருக்கலாம்.

திரைப் படம்: தேவி (1968)
நடிப்பு: முத்துராமன், தேவிகா
இசை: V. தக்ஷிணாமூர்த்தி
பாடல்: கண்ணதாசனாக இருக்கலாம்.

இயக்குனர்: ஏ.கே.வேலன்


http://asoktamil.opendrive.com/files/Nl8xMjg5NDc0MF9KWTg4MF82ODkx/Thithikkum%20muthamize-Devi-TMS%20PS.mp3






தித்திக்கும் முத்தமிழே
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
பூங்குனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட
பூங்குனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட
பொதிகை மலை தந்த செல்வமே
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

வானத்து நிலவொடு வையத்தில் பிறந்த உன் வயதை அறிந்தவர் இல்லை
வானத்து நிலவொடு வையத்தில் பிறந்த உன் வயதை அறிந்தவர் இல்லை
மதுரை நகர் தங்க மாடத்தில் நீ கொண்ட வளத்துக்கும் ஈடிணையில்லை
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

சில்லெனும் இளந்தென்றல் மெல்ல நடக்கின்ற தென் திசை மண்ணில் பிறந்தாய்
தென் திசை மண்ணில்
தென் திசை மண்ணில் பிறந்தாய்
தெய்வப் புலவரின் சென் நா பரப்பிலும் சேர்வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய்
தெய்வப் புலவரின் சென் நா பரப்பிலும் சேர்வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய்
இமய மலைத் தொட்டு குமரி முனை வரை இரு கையும் வீசி நடந்தாய்
இரு கையும் வீசி நடந்தாய்
இயல் இசை நாடகம் என மூன்று கிளைவிட்டு யாவரும் போற்றிட வாழ்ந்தாய்
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்த பாடலை கேட்டதே இல்லை.. நன்றி சார்..

Unknown சொன்னது…

பாடல் - பல்லடம் மாணிக்கம்,Not Kannadhasan

கருத்துரையிடுக