பின்பற்றுபவர்கள்

திங்கள், 1 ஜூலை, 2013

ஆஹா ஆயிரம் சுகம் தேடி வரும் முகம்

இந்தத் திரைப்படத்தை பற்றி அதிகம் தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடல் சுகம். அதிகம் அறியப்படாத இசையமைப்பாளர்.

திரைப் படம்: யாரோ எழுதிய கவிதை (1986)
இசை: ஆனந்த் ஷங்கர்
பாடல்: வைரமுத்து
நடிப்பு: சிவகுமார், ஜெயஸ்ரீ
இயக்கம்: C V ஸ்ரீதர்
குரல்கள்: K J யேசுதாஸ், வாணிஜெயராம்

 
ஆஹா ஆயிரம் சுகம்
தேடி வரும் முகம் தேவி முகமோ
இளமை பாடும் காதலின் கதை
நான் எழுதும் கவிதை வந்ததோ 

ஆஹா ஆயிரம் சுகம்
தேடி வரும் முகம் தேவன் முகமோ
இளமை பாடும் காதலின் கதை

நீ எழுதும் கவிதை வந்ததோ 
உன் நெஞ்சில் நான் வந்து உட்கார்ந்த போது
உள்ளத்தில் முன் பாரம் பின் பாரம் ஏது
 
பூச்செண்டு போல் என்னை நீ தீண்டும் நேரம்
சூடான தேகத்தில் சேரும் ஈரந்தான்
 

தூது போகும் பேதை மனங்களில் பாடும் வானம்பாடி நீயோ 
ராக தேவன் கோயில் மணிகளில் சூடும் காதல் கிரீடம் நீயோ 
மீன்...வலை...விழியோ 

ஆஹா ஆயிரம் சுகம் தேடி வரும் முகம் தேவன் முகமோ 
இளமை பாடும் காதலின் கதை நான் எழுதும் கவிதை வந்ததோ 

பாதம் வந்து போகும் வழிகளில் பூவில் பாதை போடலாமா 
போகும் பாதை யாவும் அழகிய தேகமாக மாறலாமா 
நான்...துணை...வரவோ 

காதல் நோயில் வாடும் மனதினை கைகள் வந்து காக்க வேண்டும் 
கைகள் வந்து காக்கும் இடங்களை நானும் இங்கு பார்க்க வேண்டும் 
தேன்...மழை...விழுமோ 

ஆஹா ஆயிரம் சுகம் தேடி வரும் முகம் தேவன் முகமோ 
இளமை பாடும் காதலின் கதை நீ எழுதும் கவிதை வந்ததோ 
வந்ததோ...லால லா லால லா லால லா லால லா லால லா லால லா

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பாடல் கேட்டு பல வருஷம் ஆகி விட்டது... நன்றி...

கருத்துரையிடுக