பின்பற்றுபவர்கள்

வியாழன், 11 ஜூலை, 2013

கலை வந்த விதம் கேளு கண்ணே

இந்தப் பாடலை எழுதியவர் P K சுந்தரம் என்றால் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரமா?
ஏன் இந்தப் பாடலுக்கு மட்டும் அவரது முழுப் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது? அவரும் மிகச் சில திரைப் பட பாடல்களையே இயற்றி இருப்பதால் பாடல் நடையைக் கொண்டும் தீர்மானிக்க முடியவில்லை.
விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

அழகான தமிழ் பாடல். குழந்தைகள் இந்தப் பாடலை பாடி பழக்கப் பட்டால் தமிழ் அச்சர சுத்தமாக பேசலாம். நல்ல நாவன்மை தரும் பாடல் வரிகள்.

திரைப் படம்: தொழிலாளி
நடிப்பு: எம் ஜி யார், K R விஜயா, ரத்னா
இசை: K V மகாதேவன்
இயக்கம்: M A திருமுகம்
குரல்: P. சுசீலா

http://asoktamil.opendrive.com/files/Nl8xNTQ3NDQ3M18wcEVTSl85NjMz/Kalai%20vantha.mp3






கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
கலை வந்த விதம் கேளு கண்ணே

காற்றினிலே பிறந்து ஒலியானது
அது காட்டுப் புல்லில் நுழைந்து இசையானது
காற்றினிலே பிறந்து ஒலியானது
அது காட்டுப் புல்லில் நுழைந்து இசையானது

மாட்டிடையன் கையில் குழலானது
குழந்தை வாயினிலே நுழைந்து மொழியானது
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
கலை வந்த விதம் கேளு கண்ணே

உள்ளத் துடிப்பில் தாளம் உருவானது
உயிரின் உணர்ச்சியிலே சுருதி லயமானது
உள்ளத் துடிப்பில் தாளம் உருவானது
உயிரின் உணர்ச்சியிலே சுருதி லயமானது

தெள்ளுத் தமிழ் குழந்தை எழிலானது
தெள்ளுத் தமிழ் குழந்தை எழிலானது
அதன் தித்தித்தை தித்தித்தை
தித்தித்தை என்ற நடை சதிரானது
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
கலை வந்த விதம் கேளு கண்ணே



3 கருத்துகள்:

NAGARAJAN சொன்னது…

பாடலை எழுதியவர் கூத்தன் பூண்டி சுந்தரம்

Unknown சொன்னது…

நன்றி நாகராஜன் ஸார்.

Raashid Ahamed சொன்னது…

கேள்விப்படாத பாடகர் ! ஆனால் பாடல் வரிகள் சிறந்த பாடலாசிரியர் எழுதியது போல உள்ளது.

கருத்துரையிடுக