பின்பற்றுபவர்கள்

திங்கள், 15 ஜூலை, 2013

புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே

திருமணமாகி புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண்களுக்கு தனது அண்ணன் அறிவுரை கூறுமாறு அமைந்துள்ள அருமையான பாடல்.

அந்த காலத்தில், ஒரு குடும்பத்திற்கு புதியதாக திருமணமாகிச் செல்லும் பெண்கள் எப்படி நடந்துக் கொண்டார்கள் என்பது  பற்றி விளக்கிக் கூறும் அருமையானப் பாடல் இது.

உண்மையில் இது தான் ஒரு தமிழ்நாட்டு பெண்ணின் வாழ்வு முறை. ஆனால்  இதை பெண்ணடிமைப் பாடல் என்று சிலர் சொல்வர். 

ஆனாலும் மனிதன் இப்படித்தான் வாழனும், மிருகங்கள் எப்படியும் வாழலாம் என்கின்ற விதி முறைகளை நாம் மீறினால், நாம் சமீபத்தில் பார்த்த டில்லி வன்முறைதான் நடக்கும்.

திரைப் படம்: பானை பிடித்தவள் பாக்கியசாலி (1958)
நடிப்பு: நாகேஸ்வரராவ், பாலாஜி, T S துரைராஜ், சாவித்திரி
இசை: எஸ். வி. வெங்கட்ராமன்
பாடியவர்: திருச்சி லோகநாதன்
இயக்கம்: T S துரைராஜ்

 



புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே
தங்கச்சிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
தங்கச்சிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

அரசன் வீட்டு பொண்ணாக இருந்தாலும்
அம்மா
அகந்தை கொள்ளக் கூடாது என்னாளும்
அரசன் வீட்டு பொண்ணாக இருந்தாலும்
அம்மா
அகந்தை கொள்ளக் கூடாது என்னாளும்
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே 
தங்கச்சிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

மாமனாரை மாமியாரை மதிக்கனும்
உன்னை மாலையிட்ட கணவரையே துதிக்கனும்
சாமக் கோழி கூவையிலே முழிக்கனும்
குளிச்சி சாணம் தெளித்து கோலம் போட்டு சமையல் வேலை துவக்கனும்
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே 
தங்கச்சிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

கண்ணால் பேசும் பயல்கள் முன்னே நில்லாதே
நீ காணாததை கண்டேன் என்று சொல்லாதே
கண்ணால் பேசும் பயல்கள் முன்னே நில்லாதே
நீ காணாததை கண்டேன் என்று சொல்லாதே
இந்த அண்ணே சொல்லும் அமுத வாக்கைத் தள்ளாதே
நம்ம அப்பன் பாட்டன் பேரைக் கெடுத்துக் கொள்ளாதே
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே 
தங்கச்சிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

புருசன் உயிரை மீட்டுத் தந்தவ பொண்ணுதான்
ஓடும் பொழுதை அங்கே நில்லுன்னு சொன்னவ பொண்ணுதான்
அரசன் நடுங்க நீதி சொன்னவ பொண்ணுதான்
அவுக ஆஸ்தி கணக்கு சொன்னா கற்பு ஒன்னுதான்
ஆஸ்தி கணக்கு சொன்னா கற்பு ஒன்னுதான்
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே 
தங்கச்சிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
தங்கச்சிக் கண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே

தாலிக் கட்ட போகையிலே தாய் தகப்பன் இல்லையினு
சன்ஜலப்படாதே அம்மா தங்கச்சி
தாலிக் கட்ட போகையிலே தாய் தகப்பன் இல்லையினு
சன்ஜலப்படாதே அம்மா தங்கச்சி
தார வார்க்க நானிருக்கேன்
சீர் கொடுக்க நான் இருக்கேன்
தாயைப் போல நானிருக்கேன் தங்கச்சி
தாயைப் போல நானிருக்கேன் தங்கச்சி

புருசன் கூட நீ இருந்து பூவும் மணமும் போல் மகிழ்ந்து
கூரைச் சேலையும் தாலியும் மஞ்சளும்
குங்குமப் பொட்டும் நகையும் நட்டும்
கொறைஞ்சிடாம நிறைஞ்சிக்கிட்டு
மக்களைப் பெத்து மனையை பெத்து
மக்கள் வயத்துல பேரனை பெத்து
பேரன் வயத்துல பிள்ளையை பெத்து
நோய் இல்லாம நொடி இல்லாம நூறு வயசு வாழ போற தங்கச்சி
நமக்கு சாமி துணையிருக்கு தங்கச்சி
நமக்கு சாமி துணையிருக்கு
சாமி துணையிருக்கு தங்கச்சி


4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எங்கள் வீட்டில் கல்யாணத்தின் போது இந்த பாடல் மறக்காமல் போடுவார்கள்... அந்த நாள் ஞாபகம் வந்தது... கருத்துள்ள பாடலுக்கு நன்றி சார்...

Unknown சொன்னது…

புருஷன் வீட்டில், திருநிறைச் செல்வி அங்கையர்க்கண்ணி போன்ற பாடல்கள் அந்தக் காலத்தில் கல்யாணங்களில் பாட்டுக் கச்சேரிகள் இல்லாத போது இருந்தவை. இப்போதும் நகரங்கள் இல்லாத பகுதிகளில் இந்தப் பழக்கம் இருக்கலாம். நன்றி தனபால் ஸார்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

aahaa arumai...!

Thuraiyooran சொன்னது…

இப்படியாக வாழ்வதற்காக அந்தத் தங்கையை அனுப்புவதற்குப் பதிலாக.......... லூசுத்தனமான அண்ணன் பாடல்.

கருத்துரையிடுக