பின்பற்றுபவர்கள்

புதன், 24 ஜூலை, 2013

கடலோரம் வாங்கிய காத்து


நடிகை மஞ்சுளா அவர்களுக்கு நமது அஞ்சலி.
ரொம்பவும் பெரிதாக பேசப் படவேண்டியவர் இல்லை என்றாலும், தமிழ் திரையுலகில் ஒரு சிறு துறும்பை கிள்ளி போட்டவர். இளம் வயதில் அழகான நடிகை. பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக சொற்ப காலம் வலம் வந்தவர். (நான் கூட இதில் அடக்கம்)

டி எம் எஸ் தனித்துப் பாடிய இனிமை நிறைந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
மெரினா கடற்காற்றுப் போல பாடலும் மென்மையாக வீசுகிறது. அழகான படப்பிடிப்பு.

திரைப்படம்: ரிக்க்ஷாகாரன் (1970)
பாடல்: வாலி
இசை: M S விஸ்வனாதன்
குரல்: T M S
இயக்கம்: M கிருஷ்ணன் நாயர்
நடிப்பு: எம் ஜி யார், மஞ்சுளா

http://asoktamil.opendrive.com/files/Nl8xNjQ4MzIzOF85WERQal81OTEy/kadaloram%20vaangiya.mp3





கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கதகதப்பா மாறிடுமோ
காதலித்தால் ஆறிடுமோ

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

சிறு மணல் வீட்டில் குடி ஏறும் நண்டானது
இவள் கண் பார்த்து மீன் என்று திண்டாடுது
பொங்கும் நுரையோடு கரை ஏறும் அலையானது
இந்த பெண் பார்த்து நிலவென்று விளையாடுது

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

வண்ண பூ சேலை மலர் மேனி மறைக்கின்றது
அதை பூங்காற்று மெதுவாக இழுக்கின்றது
இடம் கொடுக்காமல் தளிர் கைகள் தடுக்கின்றது
வெட்கம் தாளாமல் இளம் நெஞ்சம் துடிக்கின்றது

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து

கோயில் சிலை ஒன்று உயிர் கொண்டு நடை போட்டதோ
இரு விழி கொண்டு எனை பார்த்து எடை போட்டதோ
ஒரு துணை வந்து விலை கொள்ளத் தடை போட்டதோ
அதை நான் வாங்க அவள் நானம் தடை போட்டதோ

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கதகதப்பா மாறிடுமோ
காதலித்தால் ஆறிடுமோ

கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து 

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல பாடல்...

அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

Raashid Ahamed சொன்னது…

இளவயது மஞ்சுளா ஒரு கொள்ளை அழகு. நீயா படத்தில் விஜயகுமாருடன் நடிக்கும் போது அந்த அழகு இல்லை. ஆனால் இத்தனை சீக்கிரம் அகால மரணம் அடைந்திருக்க வேண்டாம். என்ன செய்வது படைத்தவன் திரும்ப அழைத்தால் போகத்தானே வேண்டும். அவருக்கு ஆத்ம சாந்தியும் அவர் குடும்பத்தினருக்கு துக்கத்தை தாங்கும் வலிமையும் கிடைக்க பிரார்த்திப்போம்.

கருத்துரையிடுக