பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது சிரித்தேன்

மு க. முத்துவின் இன்னுமொரு இனிய பாடல்.

திரைப் படம்: இங்கேயும் மனிதர்கள் (1975)
நடிப்பு: மு க முத்து, வெண்ணிற ஆடை நிர்மலா
இசை: T S நடேஷ் (யாரிது)
பாடல்: தெரியவில்லை
இயக்கம்: A L நாராயணன்
பாடியவர்கள்: மு க  முத்து, S ஜானகி

http://asoktamil.opendrive.com/files/Nl8xNDYxMDUwOF8xRDg2VF8xYjky/Mottu%20Virinthathu[128].mp3





மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
இங்கு ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை கொடுத்தேன்
தேனை அள்ளிக் சுவைத்தேன்
ஆசைக் கொண்ட உள்ளம் தன் ஆவல் தன்னைச் சொல்லும்
என் மன மாளிகை உன் வசமானது எடுத்தேன்
நான் என்னைக் கொடுத்தேன்
மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்

ஹோ ஹோ ஹோ ஹோ
ல ல ல ல ல

அழகோவியம் ஒன்று நடமாடுது
அது அலையாடும் நதியோரம் கதை பேசுது
அழகோவியம் ஒன்று நடமாடுது
அது அலையாடும் நதியோரம் கதை பேசுது

இள நெஞ்சில் அரங்கேறும் புது நாடகம்
இது இடைவேளை இல்லாத தொடர் நாடகம்
இள நெஞ்சில் அரங்கேறும் புது நாடகம்
இது இடைவேளை இல்லாத தொடர் நாடகம்

மின்னல் இடை ஆட
இன்பம் தன்னை தேட
மின்னல் இடை ஆட
இன்பம் தன்னை தேட

என்னாளும் சுகம் காணும் நமதுள்ளமே

மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்

செவ்வானமே சிந்தும் மழையாகுமே
உன் சிங்கார சிரிப்பெல்லாம் முத்தாகுமே
செவ்வானமே சிந்தும் மழையாகுமே
உன் சிங்கார சிரிப்பெல்லாம் முத்தாகுமே

மது ஊறும் இதழோரம் நீ தேடி வா
இந்த மாதுள்ளம் பூவாகும் நான் காணவா
மது ஊறும் இதழோரம் நீ தேடி வா
இந்த மாதுள்ளம் பூவாகும் நான் காணவா

எண்ணம் ஒன்று சேரும்
கண்ணும் கண்ணும் மோதும்
எண்ணம் ஒன்று சேரும்
கண்ணும் கண்ணும் மோதும்
என்னாளும் சுகம் காணும் நமதுள்ளமே

மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
இங்கு ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை கொடுத்தேன்
தேனை அள்ளிக் சுவைத்தேன்
மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது
சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்


1 கருத்து:

Raashid Ahamed சொன்னது…

முகமுத்துவின் குரலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பின்னணிப்பாடலுக்கு தகுந்த குரலாக தெரியவில்லை. இருந்தாலும் இப்போது யார் யார் பாடுவதென்ன விவஸ்தை இல்லாததனால் முக முத்து குரலே தேவலாம் போல் தோன்றுகிறது.

கருத்துரையிடுக