அப்போதைய சகலாகலா வல்லவரின் பாடல், படம், இசையில் மனம் உருக வைக்கும் காதல் சோகம் இழையும் பாடல். சரியான குரல் தேர்வு.
அந்தக் காலக் கட்டத்தில் இது போன்ற பாடல்கள் இளைஞர்களை பித்து பிடித்து அலைய வைத்தது.
படம்: உயிருள்ள வரை உஷா
இசை, இயக்கம், பாடல்: டி.ராஜேந்தர்
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்
நடிப்பு: டி. ராஜேந்தர், நளினி, கங்கா
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு
மன்னன் மனம் வாடுதுன்னு
மங்கைதனைத் தேடுதுன்னு
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு
மன்னன் மனம் வாடுதுன்னு
மங்கைதனைத் தேடுதுன்னு
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை
தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை
தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
காதலில் வாழ்ந்த கன்னி மனம்
காவலில் வாடையில் கண்ணிவிடும்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
கூண்டுக்குள்ளே அலைமோதும்
காதல் கிளி அவள் பாவம்
காதல் கிளி அவள் பாவம்
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே
அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே
நிலவினை மேகம் வானில் மறைக்க
அவள் நிலை யாரோ வீட்டில் தடுக்க
மேகமது விலகாதோ
சோகமது நீங்காதோ
மேகமது விலகாதோ
சோகமது நீங்காதோ
சோகமது நீங்காதோ
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு
மன்னன் மனம் வாடுதுன்னு
மங்கைதனைத் தேடுதுன்னு
காற்றே பூங்காற்றே
என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
காதோரம் போய் சொல்லு
நீ காதோரம் போய் சொல்லு
நீ காதோரம் போய் சொல்லு
1 கருத்து:
சோகத்தில் சுகம் தரும் பாட்டு - கல்லூரி நாட்களில்...!
கருத்துரையிடுக