பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 4 அக்டோபர், 2013

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

நல்ல மனிதனாக வாழ கீழ்கண்ட பல வழிகள் இருக்க இந்த இனிய உலகில் நமது பல நண்பர்கள் வாழ மாயமான எவ்வழிகளையெல்லாம் கடைபிடிக்கிறார்கள் என்பதை பார்த்துகொண்டுதானே இருக்கிறோம். 
நல்ல கருத்துள்ள பாடல்.

படம் : சுமைதாங்கி (1962)
பாடியவர்: P.B.ஸ்ரீநிவாஸ்
இசை : M S விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடலாசிரியர் : கண்ணதாசன்

இயக்கம்: ஸ்ரீதர்
நடிப்பு: ஜெமினி, முத்துராமன், தேவிகா







மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

வாரிவாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
தெய்வமாகலாம்

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகளாகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்களாகலாம்

யாருக்கென்று அழதபோதும் தலைவனாகலாம்
மனம் மனம் அது கோவிலாகலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்

துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவிலாகலாம்.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
தெய்வமாகலாம்


1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிக மிக பிடித்த பாடல்... நேற்று கூட ஒரு தொலைக்காட்சியில் ரசித்தேன்...

கருத்துரையிடுக