பின்பற்றுபவர்கள்

சனி, 19 அக்டோபர், 2013

பேசாத மொழி ஒன்று உண்டு

குறுகிய காலத்தில் அடங்கி போன கோவை சௌந்தர்ராஜன் அவர்களும், சிறந்த குரல் வளம் இருந்தும் தமிழிலில் சிறப்படையாத B S சசிரேகா, இவர்களுக்கு மிகுந்த புகழ் தேடித் தந்த பாடல். 

ஏதும் புதுமை இல்லாத வழக்கமான இசை:சங்கர் கணேஷ்
திரைப் படம்:பந்தாட்டம் 
மற்ற விபரங்கள் எதுவும் தெரியவில்லை.







ல ல லா ல ல லா ஹே ஹே ஹே ஹே


ல ல லா ல ல லா ஹா ஹா ஹா ஹா


பேசாத மொழி ஒன்று உண்டு

அதை பேச விழி நான்கு உண்டு

முதல் பார்வை

முதல் வார்த்தை


அதை சொன்னால் தன்னால் மலரும்

வண்ண தங்கமதில் வந்து விழும்

செந்தமிழில் தேனொழுகும்

சொந்தமதை கொண்டுவரும்


பேசாத மொழி ஒன்று உண்டு

அதை பேச விழி நான்கு உண்டு


செவ்வாயும் திங்களும் ஒரு பெண்ணானதோ

தொட்டு தாலாட்ட பாராட்ட வரவோ

செவ்வாயும் திங்களும் ஒரு பெண்ணானதோ

தொட்டு தாலாட்ட பாராட்ட வரவோ


கொஞ்சம் பொழுதாகட்டும் நெஞ்சம் துணிவாகட்டும்

பின்பு ஒரு கோடி புது பாடல் உருவாகட்டும்


கட்டு பூங்குழலில் மூடிவரும்


பெண்ணழகு தேடி வரும்


வந்த சுகம் கோடி பெறும்


அதை பேச விழி நான்கு உண்டு


முந்தானை பந்தாடும் இடை நூலாட்டமோ

மெல்ல நானாட இடம் கொஞ்சம் தருமோ

முந்தானை பந்தாடும் இடை நூலாட்டமோ

மெல்ல நானாட இடம் கொஞ்சம் தருமோ


மங்கை ஒரு பாதியும்

மன்னன் மறு பாதியும்

தந்து மடி மீது குடியேறி விளையாடலாம்


அந்தப் பொன்னுலகம் என்று வரும்

சொன்னவுடன் நின்று வரும்

இன்று முதல் என்று வரும்


பேசாத மொழி ஒன்று உண்டு

அதை பேச விழி நான்கு உண்டு

முதல் பார்வை

முதல் வார்த்தை


அதை சொன்னால் தன்னால் மலரும்

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கேட்காத பாடல்... நன்றி சார்...

கருத்துரையிடுக