பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 14 மார்ச், 2014

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு....
தன்னம்பிக்கைத் தரும் பாடல் வரிகள். சொல்வது மிக சுலபம்தான். நடை முறை வாழ்க்கை என்பது வேறு என்றும் சிலர் சொல்வது காதில் விழுகிறது.
நல்ல இனிமையான பாடல்.


திரைப் படம்: பந்த பாசம் (1962)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ், டி எம் எஸ்
நடிப்பு: சிவாஜி, தேவிகா, சாவித்ரி
இயக்கம்: A பீம்சிங்க்


http://asoktamil.opendrive.com/files/Nl8zNDI4NDY1MV9PZUpndl9lNThl/Kavalaigal%20Kidakkattum-BanthaPaasam.mp3)

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு

நீதியும் நெருப்பும் ஒன்றென்பார்
நெருங்கிடும் போதே சுடும் என்பார்
நீதியும் நெருப்பும் ஒன்றென்பார்
நெருங்கிடும் போதே சுடும் என்பார்
யாரையும் எதுவும் சுடவில்லை
என்னையும் பழியோ விடவில்லை

சுட்டதும் தங்கத்தின் நிறம் போமோ
தொட்டதும் மலர்களின் மணம் போமோ
கற்றவன் கலங்குதல் அழகாமோ
சட்டமும் கற்பனைக் கதையாமோ

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு

நாவுக்கும் மனதுக்கும் உள்ள வழி
நான்கு விரல்கடை தூர வழி
நாவுக்கும் மனதுக்கும் உள்ள வழி
நான்கு விரல்கடை தூர வழி
சொல்லுக்கும் செயலுக்கும் காத வழி
சுற்றமும் சுகமும் வேறு வழி

வந்ததில்லெல்லாம் பொருளுண்டு
வருவதில் வெற்றியும் நமக்குண்டு
நிச்சயம் இரவுக்கு பகலுண்டு
நீதியின் கண்களில் ஒளியுண்டு

கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு

அண்ணனில் ஆயிரம் பேருண்டு
ஆயினும் உன் போல் யாருண்டு
பழிகளில் ஆயிரம் வகையுண்டு
பார்ப்போம் இதற்க்கோர் முடிவுண்டு
பழிகளில் ஆயிரம் வகையுண்டு
பார்ப்போம் இதற்க்கோர் முடிவுண்டு

வந்ததில் எல்லாம் பொருளுண்டு
வருவதில் வெற்றியும் நமக்குண்டு
நிச்சயம் இரவுக்கு பகலுண்டு
நீதியின் கண்களில் ஒளியுண்டு

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் பிடித்த பாடல் + வரிகள்...

Ksmuthukrishnan Ipoh சொன்னது…

எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

கருத்துரையிடுக