கேட்டிராத பாடல். 1995 தான் வந்திருக்கிறது. படம் வெளியாகவில்லை போலிருக்கிறது. படத்தினை பற்றிய மற்ற விபரங்கள் தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடல் இனிமைதான்.
திரைப்படம்: சந்நதிப்பூக்கள் (1995)
பாடியவர்கள்: எஸ் பி பி, சித்ரா
இசை :விஜய் ஆனந்த்
http://asoktamil.opendrive.com/files/Nl8zMTY4OTgzOV9HaU1uOV9jNzhl/Ithu%20Thaan%20Ithu%20Thaan%20Sparisam%20Enbatha.mp3
செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்
தென்றலும் தீண்டியதே
தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்
சிந்தனை மாறியதே
சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்
அம்புகள் பாய்ந்தனவே
மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்
வாழிய வாழியவே
இதுதான் இதுதான் ஸ்பரிஸம் என்பதா
இளமை எழுதும் சரஸம் என்பதா
இது கனவா நிஜம்தானா
வந்து சொல்வாய் மன்மதா
உயிர் கரையும் ஒலி கேட்கும்
இதை
காதல் என்பதா
மின்னல் ஒன்று என்னை தீண்டவும்
மேனி எங்கும் பூக்கள் பூக்கும்
இதுதான் இதுதான் ஸ்பரிஸம் என்பதா
இளமை எழுதும் சரஸம் என்பதா
ஆசைக்கனி தொடவா விடவா
அடி மனதில் போராட்டம்
ஆடை என்ன உறவா பகையா
பட்டி மன்றம் அரங்கேற்றமே
உள்ளிருந்த காதல் மெல்ல
கண் திறந்து பார்க்குமே
விதையாய் இருந்தால்
ஸ்பரிஸம் நீர்
வார்க்குமே
ஹோய்
இதுதான் இதுதான் ஸ்பரிஸம் என்பதா
இளமை எழுதும் சரஸம் என்பதா
கன்னம் தொட்டு இறங்கும் விரலோ
கழுத்தில் வந்து ஏன் நின்றது
கழுத்தில் உள்ள வேர்வைதானே
காதலுக்கு தேன் என்றது
இன்னும் கொஞ்சம் போங்கள் என்று
இயற்கை நம்மை கேட்டது
இதயம் தவிக்க பருவம்
பால் வார்த்தது
ஹோய்
இதுதான் இதுதான் ஸ்பரிஸம் என்பதா
இளமை எழுதும் சரஸம் என்பதா
இது கனவா நிஜம்தானா
வந்து சொல்வாய் மன்மதா
உயிர் கரையும் ஒலி கேட்கும்
இதை காதல் என்பதா
மின்னல் ஒன்று என்னை தீண்டவும்
மேனி எங்கும் பூக்கள் பூக்கும்
இதுதான் இதுதான் ஸ்பரிஸம் என்பதா
ம் ம் ம் ம் ம் ம் ம்
இளமை எழுதும் சரஸம் என்பதா
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
1 கருத்து:
புதுப் பாடல்...! நன்றி...
கருத்துரையிடுக