பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 18 மார்ச், 2014

சித்திரத்தில் பெண்ணெழுதி

வழக்கம் போல மகாதேவனின் இனிமையான, மனதைக் கிளரும் இசையில் ஜமுனா ரானி அவர்களின் அரிய பாடல்.

திரைப் படம்: ராணி சம்யுக்தா (1962)
இசை: K V மகாதேவன்
பாடியவர்: K ஜமுனாராணி
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: எம் ஜி யார், பத்மினி
இயக்கம்: R யோகானந்த்




http://asoktamil.opendrive.com/files/Nl8zMjgzMjQ3Nl9XQWpSRl83M2Q2/Chitthiratthil%20Penn.mp3







சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழ விட மாட்டாயோ
சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழ விட மாட்டாயோ
சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே

காவியத்தில் காதலென்றால்
கரைந்துருகும் கற்பனையே
காவியத்தில் காதலென்றால்
கரைந்துருகும் கற்பனையே
கண்ணிறைந்த காதலுக்கே
கண்ணீர்தான் உன் வழியோ
கண்ணிறைந்த காதலுக்கே
கண்ணீர்தான் உன் வழியோ
கண்ணீர்தான் உன் வழியோ

சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே
 ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழ விட மாட்டாயோ
சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே

அன்னை என்றும் தெய்வம் என்றும்
ஆர்ப்பரிக்கும் பெரியோரே
அன்னை என்றும் தெய்வம் என்றும்
ஆர்ப்பரிக்கும் பெரியோரே
இன்னமுதத் தெய்வமெல்லாம்
ஏட்டில் வரும் தேன்தானோ
இன்னமுதத் தெய்வமெல்லாம்
ஏட்டில் வரும் தேன்தானோ

மன்னர் குலக் கன்னியரும்
கண்கலங்க நேருமென்றால்
மன்னர் குலக் கன்னியரும்
கண்கலங்க நேருமென்றால்
மண்டலத்தில் பெண்களுக்கு
வாய்த்த விதி இதுதானோ
மண்டலத்தில் பெண்களுக்கு
வாய்த்த விதி இதுதானோ
வாய்த்த விதி இதுதானோ

சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழ விட மாட்டாயோ
சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர் படுத்தும் மாநிலமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக